முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் அவசர அறிவித்தல்..! » Sri Lanka Muslim

முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் அவசர அறிவித்தல்..!

Contributors
author image

Editorial Team

சகல பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு, வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அவசர அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

அந்த அறிவித்தலை கீழே காணலாம்,

2020.11.05

சகல பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு,

அவசர அறிவித்தல் – பள்ளிவாசல்களில் பேணப்பட வேண்டிய கோவிட் 19 கட்டுப்பாடுகள் – IV

01.11.2020 ஆம் திகதி சுகாதர அமைச்சினால் வெளியிடப்பட்ட கொவிட் 19 வழிகாட்டல்களுக்கு அமைவாக மத வழிபாட்டுத்த தளங்களில் அதிக பட்ச நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கருத்திற் கொண்டு இலங்கை வக்பு சபையினால் பின்வரும் நடைமுறைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

1. எல்லா பள்ளிவாசல்களிலும் எந்த நேரத்திலும் அதிக பட்சம் 25 நபர்களை மாத்திரமே அனுமதித்தல்.

2. அவ்வாறு 25 நபர்களை தேர்ந்தெடுக்கும் முறை ஜமாத்தினருக்கு முன்னரே அறிவிக்கப்பட வேண்டும்.

3. ஏனைய அனைத்து சுகாதாரக மற்றும் பாதுகாப்பு துறையினரால் விதிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் இலங்கை வக்பு சபையின் பணிப்புரைகள் மிக கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

4. மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும், தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் இலங்கை வக்பு சபையின் மறு அறிவித்தல் வரை மூடப்படல் வேண்டும்.

5. மேற்கூறப்பட்ட வரையரைகளை கண்டிப்பாக பேணுவது சிரமம் அல்லது முடியாது எனக் கருதுகின்ற பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள்க அல்லது பொறுப்பாளர்கள் மறு அறிவித்தல் வரை தமது தற்துணிவின் பேரில் பள்ளிவாசல்களை மூடுவதற்கு முடியும்.

இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய,

ஏ. பீ. எம். அஷ்ரப்
பணிப்பாளர்
வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

Web Design by The Design Lanka