முஸ்லிம் சமுகத்திற்குள் இருக்கும் புள்ளுருவிகளை ஓரங்கட்ட வேண்டியது காலத்தின் தேவை. - Sri Lanka Muslim

முஸ்லிம் சமுகத்திற்குள் இருக்கும் புள்ளுருவிகளை ஓரங்கட்ட வேண்டியது காலத்தின் தேவை.

Contributors
author image

A.S.M. Javid

இலங்கையில் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரானவர்கள் என பெரும்பான்மை இனவாதிகள் சித்தரிக்கப்பட்ட வேளையில் இஸ்லாமியப் பேரை வைத்துக் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படைகளையே மாற்ற நினைக்கும் மிகவும் வெறுக்கத் தக்க கருத்துக்களை வெளியிடுவது சகல முஸ்லிம்களையும் சமய ரீதியாக பலிக்கடாக்களாக ஆக்கும் செயற்பாடாகும்.

 

இனவாதிகள் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் குந்தகம் விளைவிக்க ஒவ்வொரு கனமும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில்  அவர்களின் செயற்பாடுகளுக்கு வாய்க்கு பொரியரிசி போட்டாற்போல் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் என்று தன்னை அறிமகப்படுத்தியுள்ள முஸம்மில் முஸ்லிம் பெண்கள் அணியும் அபாய விடயத்தில் இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களை தெரிவித்துள்ளமை முழு முஸ்லிம் சமுகத்தையும் கவலை கொள்ளச் செய்துள்ளதுடன் அவரின் இந்த பிற்போக்கான இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் கருத்தானது அவர் மீது அனைத்து முஸ்லிம்களையும் தற்போது ஆத்திரம் கொள்ளச் செய்துள்ளது.

 

இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்டு வரும் இனவாதக் கருத்துக்கள் மற்றும் அரங்கேற்றப்பட்டு வரும் பல செயற்பாடுகள் கடந்த காலங்களில் பல அழிவுகளையும், கொலைக் கலாச்சாரத்தையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாது தொடர்ந்தும் முஸ்லிம் சமுகத்தை விழுங்க நினைக்கும் சக்திகளுக்கு முஸம்மில் பாலை வார்த்துள்ளமை ஒரு வெட்கக் கேடான செயல் என முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் கண்டனம்  தெரிவிக்கின்றனர்.

 

இன்று சிறுபான்மை என்ற ஒரேயொரு காரணத்திற்காக காழ்ப்புணர்ச்சி கொண்ட இனவாதக் குழுக்கள் அரசியல் மற்றும் பாதுகாப்பு விடயங்களை தம்வசப்படுத்தி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணங்களைப் பெற்றுக் கொண்டு மனித நேயமற்ற பல மனித உரிமை மீறல்களைச் செய்த வந்து கொண்டிருக்கும் போது முஸ்லிமாகப் பிறந்த ஒர் நபர் அவர்களின் நிழலில் இருந்து கொண்டு மார்க்கத்தை கிஞ்சித்தும் நினைக்காது எடுத் எடுப்பில் பர்தா அடிப்படை வாதத்தை தோற்றுவிப்பதாகவும் பெண்கள் அபாயா அணியத் தேவையில்லை சாரி அணிந்தால் போதும் என்ற கருத்தானது இவர் ஒரு இஸ்லாமியனா? என்பதில் முஸ்லிம் சமுகத்திற்க சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து கலிமாச் சொன்ன எந்த முஸ்லிமும் இஸ்லாமியக் கலாச்சார விடயங்களில் எதிராக அல்லது முரணாக கதைக்க கிட்டவும் செல்ல மாட்டான் ஆனால் முஸம்மில் முட்டாள்தனமாக இஸ்லாமிய விடயங்களைக் கூறி அந்நிய சமுகம் குறிப்பாக முஸ்லிம்களை அழிக்கவென கங்கனங் கட்டிக் கொண்டிருக்கும் இனவாதிகளுக்கு முஸ்லிம்கள் மீது முகத்தில் துப்பவதற்கு வழி சமைத்துக் கொடுத்துள்ளமையானது பாரிய வேதனையையும்,  கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இன்று இனவாதிகளின் முழு இலக்கும் முஸ்லிம்களின் சமய, கலை, கலாச்சார விடயங்கள், பொருளாதார, அரசியல்  உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் அழிக்கும் செயல் திட்டங்களை தாராளமாகவே முன்னெடுத்து வரும் இவ்வேளையில் அபாயாவால் இஸ்லாமிய நாடுகளின் கலை கலாச்சாரம் பின்பற்றப்படுகின்றது என்ற கூறியதும் அவருக்கு இஸ்லாமியர்கள் உடுத்தும் கௌரவமான உடைகளை அறியாதிருப்பதும் வேடிக்கையான விடயமாகவம் சிறுபிள்ளைத் தனமான விடயமாகவும் தற்போது நோக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் இஸ்லாமிய நாடுகளை இனவாதிகள் தூற்றுவதற்கும், இஸ்லாத்தை கொச்சைப்படுத்தவதற்கும் இவ்வாறானவர்களின் கருத்துக்கள் மிகவும் முக்கியமானதாக அமையும் என்பதில் யைமில்லை.
உண்மையில் முஸ்லிம் சமுகத்தில் இப்படியும் ஒரு மனிதர் இருக்கின்றாரா? என்பதற்கு அப்பால் அவர் தெரிவித்த கருத்தக்கள் அவரின் மனட்சாட்சிக்கு சரியானதா? இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு உட்பட்டதா? அவரையும் ஒரு இஸ்லாமிய உம்மாதானே பெற்றெடுத்தால் என்பதனையும் அவர் உணர்ந்து கொள்ள வில்லையா?

 

இன்று இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு சமய ரீதியாக ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையில் எதிர் காலத்தில் இஸ்லாத்திற்கு என்னமும் நடந்து விடுமோ? என்ற பயத்தில் இஸ்லாமிய அமைப்புக்களும், சமய நிறுவனங்களும், தக்வா அமைப்புக்களும் ஏன் புத்தி ஜீவிகளும் அங்கலாய்த்துக் கொண்டு இஸ்லாமிய கலாச்சாரத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டு வரும் வேளையில்  வெண்ணை திரண்டு வரும்போது முட்டி உடைந்த கதையாக முஸம்மில் சொன்ன கதைகள் முழு இனைத்தையுமே இல்லாதொழிக்கும் செயற்பாடுகளுக்கு வழி காட்டியுள்ளதாகவே முஸ்லிம் கருதுகின்றனர்.

 

அந்நிய இனவாத சமுகத்தான் இஸ்லாத்தைப் பற்றி எத்தனை கருத்துக்கள் சொன்னாலும் அது இஸ்லாமியனுக்கு பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தாது ஏனெனில் அவனுக்கு இஸ்லாத்தைப் பற்றித் தெரியாது என்பதனால் ஆனால் ஒரு இஸ்லாமியன் ஷரிஆ சட்டத்தினை கொச்சைப்படுத்தியமை வரலாற்றில் மறக்க முடியாத மன்னிக்க முடியாத விடயம் என தக்வா உள்ளவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

கடந்த காலங்களில் இஸ்லாத்திற்கு எதிராக இனவாதிகளால் மேற் கொள்ளப்பட்ட பல அடாவடித்தனங்களுக்கும் இதுவரை குரல் கொடுக்காத ஒருவர் ஏன் தர்ஹா நகர், பேருவளை உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நாளில் மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் பெறுமதி மிக்க சொத்துக்களை சூறையாடியமை, தீயிட்டு அழித்தமை, பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் எனப் பாராது இரவோடு இரவாக மனிதாபிமானமற்ற வகையில் துரத்தப்பட்டது மட்டுமல்லாது கொலைகளைக் கூட புரிந்த பொதுபல சேனாவிற்கு எதிராக குரல் கொடுக்காது மௌனமாக இருந்த மேற்படி நபர் இந்த விடயத்தில் மூக்கை நீட்டியிருப்பது பாரிய சந்தேகத்தையும் கடும் விசனத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

 

முஸம்மிலின் கருத்தைக் கேட்ட ஒரு இஸ்லாமிய நண்பன் அவர் காவி உடையணிந்தாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை ஏனெனில் அவர் தற்போது அந்த நிலைமைக்கு வந்தததையே அவரின் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்கள் சுட்டிக் காட்டியிருப்பதாக குறிப்பிட்டார்.

 

இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் ஒன்றும் செய்யாவிட்டாலும் பறவாயில்லை தற்போதைய இக்கட்டான நிலையில் சும்மாவாவது இருக்கலாம் தானே என முஸ்லிம்கள் ஆதங்கப்படுவதுடன் இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் அதற்காக முஸ்லிம் சமுகம் இனித்தான் விளித்தெழ வேண்டும் என்ற பலமான கருத்துக்கள் பரவலாக எல்லோர் வாயிலும் உச்சரிக்கப்படுவதை காணக் கூடியதாகவுள்ளது.

 

சமுகத்தைக் காட்டிக் கொடுக்கும் நயவஞ்சகர்கள் நம்மில் இருப்பதானது மிகவும் ஆபத்தான விடயமாகவே உள்ளது. இவ்வாறானவர்களுக்கு வாக்களிக்கும் அல்லது அரசியல் ரீதியாக பின் தொடரும் முஸ்லிம் சமுகம் சற்றுச் சிந்திக்க வேண்டும் அவர் சொல்லும் இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துக்களில் அவரை ஆதரித் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும், அதற்குத் தண்டனை உண்டு  என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

 

இனியாவது முஸ்லிம் சமுகம் திடமாகச் சிந்திக்க வேண்டும் இவ்வாறானவர்கள் இனியும் தேவைதானா? என்பதனை. கடந்த காலங்களில் மேற்படி நபர் முஸ்லிம் அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் ஒரு முஸ்லிம் என்று கூட பாராது பல விடயங்களில் மக்களை புண்படுத்தும் வகையில் கதைகள் கூறியபோது அது அரசியல் ரீதியாதானே என மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை காரணம் மேற்படி நபர் அரசின் பணத்தை பெற்றுக் கொண்டு செயற்படுவது நாடேயறிந்த உண்மை. ஆனால் தற்போது அபாயா விடயத்தில் அவர் தேவையற்ற விதத்தில் மார்க்கம் தெரியாது விளையாடி இருப்பதானது அவரை முஸ்லிம் சமுகம் ஓரங்கட்டுவதற்கான ஆரம்பமாகி விட்டது மட்டுமல்லது அவரே அவரை அழித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளிவிட்டிருக்கின்றது.

 

இனவாதிகள் கூட தெரிவிக்காத கருத்தை கூறி இன்று பெரும்பான்மையுடன் சிறுபான்மை முஸ்லிம்கள் சமுகம் சண்டையிடுவதற்கான தூண்டுதலை முஸம்மில் மேற் கொண்டமையை அனைவரும் கடுமையாக கண்டிக்க வேண்டும் என அரச ஊழியர்களும் பெண்கள் அமைப்புக்களும்  தெரிவிக்கின்றனர்.

 

தற்போது பல முஸ்லிம் அமைப்புக்கள் மிகவும் கவலையுடன் அபாயா விடயத்தில் பலமானதொரு கொள்கையில் இருக்கையில் அதன் கௌரவத்திற்கும், சமயக் கொள்கைக்கும் கலங்கம் ஏற்படுத்திய விடயம் எதிரிகளுக்கு பலமான விடயமாக அமையுமுன் முஸ்லிம் சமுகம் அபாயா விடயத்தில் இன்னும் ஒருபடி கூடிய அவதானம் செலுத்த வேண்டும் என்பதனை முஸம்மிலின் விரும்பத்தகாத கருத்தில் இருந்து முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று சர்வதேச ரீதியாக இஸ்லாத்தை அழிப்பதற்காக பல மில்லியன் ரூபாய்களை செவிட்டு அமைதியான சமுகத்தை நிம்மதியற்ற வகையில் ஆக்கும் தீய சக்திகளின் வழியில் இலங்கையின் முகவர்களாக செயற்படும் முஸ்லிம் இனவாதிகளை முஸ்லிம் சமுகத்தில் இருந்து ஓரங்கட்ட வேண்டிய கடப்பாடு கலிமாச் சொன்ன ஒவ்வொரு முஸ்லிமின் தலையாய கடமையாகும்.

 

இலங்கையைப் பொருத்தவரை பாடசாலைகளாக இருக்கட்டும் பல்கலைக் கழங்களாக இருக்கட்டும், அரச, தனியார் அலுவலகங்களாக இருக்கட்டும் அதனுல் இருக்கும் இனவாதா புள்ளுரிவிகள் அந்த கௌரவமான ஆடையை அணிவதை தடுப்பதற்கு முனைப்புடன் காணப்படுகின்றனர். இவ்வாறு பல இடங்களில் அதிகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவ்வாறான விடய்ஙகளில் நீதி மன்றங்கள் கூட முஸ்லிம்களின் கலை, கலாச்சார விடயங்களில் அவர்களின் ஆடைகளை அணியலாம் என அனுமதி வழங்கியிருக்கின்றன.

 

இன்று இலங்கை முஸ்லிம்கள் அபாயா விடயத்தில் இனவாதிகளின் இலக்குகளுக்கு ஆளாகி அதன் எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்கும் ஒரு இக்கட்டான நிலையில் அவற்றை அழிப்பதற்கு துனைபோகும்  எந்தச் சக்தியாக இருந்தாலும் முஸ்லிம் சமுகம் எதிர்த்து நின்று குரல் கொடுக்க வேண்டும்.

 

ஏனவே முஸ்லிம் சமுகம் இனவருங் காலத்தில் மிகவும் அவதானத்துடன் இருப்பதுடன் இஸ்லாமிய நல்ல கொள்கைகளை எத்தருணத்திலும் மக்களுக்கு சொல்லுவதற்கும் அது தொடர்பாக விழிப்பூட்டுவதற்கும் பின்வாங்காது செயற்படுவதே காலத்தின் தேவையென தற்போது வழியுறுத்தப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team