முஸ்லிம் சமூகத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் நாட்டில் முன்னேடுப்பு, அல்ஜசீரா சேவைக்கு ஹக்கீம்..! - Sri Lanka Muslim

முஸ்லிம் சமூகத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் நாட்டில் முன்னேடுப்பு, அல்ஜசீரா சேவைக்கு ஹக்கீம்..!

Contributors
author image

Editorial Team

புர்கா தடை அனைத்து வகையான இனவாத கொள்கைளாலும் நாளுக்குநாள் ஓரங்கட்டப்படும் சமூகமொன்றறை பூதாகரமாக சித்தரிக்கின்ற களங்கப்படுத்துகின்ற முயற்சி என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அல் ஜசீராவிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சிறிய குழுவொன்றுசெய்த தவறுகளிற்கான (இவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினை மேற்கொண்டவர்கள் ) முஸ்லீம் சமூகத்திற்கு களங்கமேற்படுத்துவதற்காக அவசியமற்ற விதத்தில் முன்னெடுக்கப்பட்ட விவகாரமொன்றிற்கு அளவுக்கதிகமாக எதிர்வினையாற்றும் நடவடிக்கையே புர்காதடையும் ஏனைய தடைகளும்.

ஆனால் இந்த நிகழ்ச்சி நிரல் யுத்தமுடிவடைந்த காலம் முதல் நீண்ட காலமாக காணப்படுகின்றது.

யுத்தத்தின் முடிவு சிங்கள பெரும்பான்மையினர் மத்தியில் வெற்றிபெற்றவர்கள் நாங்கள் என்ற உணர்வை உருவாக்கியது.

அவ்வேளை ஆட்சியிலிருந்த அரசாங்கம் முஸ்லீம்களை அடுத்த எதிரியாக சித்தரிக்ககூடிய விவரிப்பை உருவாக்க நினைத்தது,இதன் மூலம் சிங்கள பெரும்பான்மையினத்தவர்களை தங்கள் பக்கமே வைத்திருக்கலாம் என அது எண்ணியது.

இது அனைத்து வகையான இனவாத கொள்கைளாலும் நாளுக்குநாள் ஓரங்கட்டப்படும் சமூகமொன்றறை பூதாகரமாக சித்தரிக்கின்ற களங்கப்படுத்துகின்ற முயற்சியை தவிர வேறு எதுவுமில்லை இது அவ்வாறானதொன்று அரசாங்கம் இஸ்லாம் பற்றிய அச்சத்தை ஏற்படுத்துவதற்காக தொடர்ச்சியான தடையற்ற பிரச்சாரத்தை தங்களின் கரங்களில் உள்ள ஊடகங்கள் மூலமாக முன்னெடுத்துள்ளது.

இதுவே அவர்களது முக்கிய தந்திரோபாயமாக காணப்பட்டது, தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு வெளியான பின்னர், மிகவும் திறமையான ஊடக தந்திரோபாயம் மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையினத்தவர்களின் உணர்வுகளை திருப்திப்படுத்துவதற்காக முயற்சிகள் இடம்பெறுகின்றன.

ஆணைக்குழு அதனை தடை செய்யவேண்டும் இதனை தடை செய்யவேண்டும் என தெரிவிப்பதன் மூலம் தனது எல்லைகளிற்கு அப்பால் செல்ல முயல்வதை அவதானிக்க முடிகின்றது

இது மிகவும் துரதிஸ்டவசமானது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்கள் முஸ்லீம்களை களங்கப்படுவத்துவதற்காக – முஸ்லீம்களை கத்தோலிக்கர்களிற்கு எதிராக மோதவிடுவதற்கக சில புலனாய்வு நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்டவர்கள் போல தோன்றுவதை சிங்கள பெரும்பான்மையினத்தவர்கள் உணர்கின்றார்கள் இல்லை

எங்களிற்கு கத்தோலிக்க சமூகம் உட்பட எந்த சமூகத்துடனும் பகைமையில்லை

இந்த இரு சமூகங்களே 2015 ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது அவ்வேளை ஆட்சியிலிருந்தவர்களிற்கு எதிராக வாக்களித்திருந்தன .

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற ஒன்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டமைக்கான காரணம் இதுவாகயிருக்கலாம்   தினக்குரல்

Web Design by Srilanka Muslims Web Team