முஸ்லிம் சமூகம் நாட்டின் நல்லாட்சியை வேண்டி நோன்பிருக்கவேண்டும் - Sri Lanka Muslim

முஸ்லிம் சமூகம் நாட்டின் நல்லாட்சியை வேண்டி நோன்பிருக்கவேண்டும்

Contributors
author image

Press Release

முஸ்லீம் சமூகம் நாட்டின் நல்லாட்சியை வேண்டி நோன்பு இருக்கவேண்டும்
மா.சபை உறுப்பினர் அன்வர்

 

எதிர்வரும் 08 ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக முஸ்லீம் சமூகம் இந்த நாட்டில் நல்லாட்சி நிலவ வேண்டும் என்பதற்காக நோன்பிருக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

 

அதாவது கடந்த பல தசாப்தங்களாக இந்த நாட்டில் சிறுபாண்மை சமூகம் குறிப்பாக முஸ்லீம் சமூகம் மத காலாச்சாரம் பொருளாதார காணி மற்றும் கல்வித்துரை போன்ற விடயங்களில் சமூகரீதியாக திட்டமிட்டு பெரும்பாண்மை இனவாதிகளால் அடக்கு முறைக்கு உட்பட்டு பல விளைவுகளை சந்தித்துள்ள கரைபடிந்த வரலாற்றை யாரும் மறக்கமுடியாது அவ்வாறே அந்த நிலையை தமிழ் சமூகமும் அனுபவித்த நிலையில்

 

நாட்டில் சிறுபாண்மை சமூகமான முஸ்லீம் தமிழ் சமூகத்தின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்றுபட்டது மாத்திரமன்றி சிங்கள பெரும்பான்மை மக்களும் பெருபாண்மையாக ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால ஸ்ரீசேனவுக்கு ஆதரவு அளிக்க முற்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பமானது இந்த நாட்டின் வராற்றில் ஒரு புரட்சியாகவே பார்க்கப்படுகின்றது இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லீம் சமுகம் அல்லாஹ்வை வேண்டி நோன்பு பிடிப்பதோடு ஏனைய சமூகமும் தமது கடவுளை வேண்டி நிற்கவேண்டும்

 

எனவே நாம் முஸ்லீம் தமிழர் சிங்களவர் என்ற இன பாகுபாட்டை மறப்பதோடு கட்சிபேதங்கள் இன்றி ஓர் அணியில் திரண்டு நல்லாட்சிக்காக பாடுபடுவதன் மூலம் நாட்டையும் நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களின் அபிலாசைகளை நிலை நாட்ட முடியும்

Web Design by Srilanka Muslims Web Team