முஸ்லிம் தீவிரவாதத்தினை பரப்பும் செயலுக்கு அரசு பொறுப்பு கூறவேண்டும் : பொதுபல சேனா - Sri Lanka Muslim

முஸ்லிம் தீவிரவாதத்தினை பரப்பும் செயலுக்கு அரசு பொறுப்பு கூறவேண்டும் : பொதுபல சேனா

Contributors

சிங்­கள பெளத்­தர்­க­ளையும் தமி­ழர்­க­ளையும் அழித்து முஸ்லிம் தீவி­ர­வா­தத்­தினை நாட்டில் பரப்பும் செய­லுக்கு அர­சாங்­கமும் பொறுப்­புக்­கூற வேண்டும். ஒரே நாளில் எம்மால் ஆட்­சியை மாற்றி நாட்டை சுத்தம் செய்ய முடியும். ஆனால் பெளத்த தர்மம் எம்மை சுமக்­கின்­ற­மை­யா­லேயே நியா­ய­மாக போரா­டு­கின்றோம் என பொது­ப­ல­சேனா பெளத்த அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

நாட்டில் அழுத்­தத்­தினை கொடுக்கும் சிறந்­த­தொரு எதிர்க்­கட்சி இலங்­கையில் இல்லை. ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆட்­சிக்கு வந்தால் நாடு ஒரே நாளில் அழிந்து விடும் எனவும் அவ் அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

பொது­ப­ல­சேனா அமைப்பின் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அவர்கள் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்.
இது தொடர்­பாக பொது­ப­ல­சேனா பெளத்த அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­பொட
அத்தே ஞான­சார தேரர் கருத்து தெரி­விக்­கையில்,
இலங்­கையில் இன்று முஸ்லிம் தீவி­ர­வாதம் பர­விக்­கொண்­டி­ருக்­கின்­றது. பெளத்­தர்கள், தமி­ழர்­களின் இனப்­பெ­ருக்­கத்­தையும் விடவும் பல­ம­டங்கு முஸ்­லிம்கள் இலங்­கையில் இருக்­கின்­றனர். மத்­திய கிழக்கு நாடு­களின் தீவி­ர­வா­தக்­கா­ரர்­க­ளுக்கும் பிரி­வி­னை­வாத அமைப்­பு­க­ளுக்கும் இலங்­கையில் இட­ம­ளிக்­கக்­கூ­டா­தென நாம் குறிப்­பிட்டும் அர­சாங்கம் கவ­னத்திற் கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை.
அர­சாங்­கத்தின் அலட்­சி­ய­மான ஆட்சி முறை­யினால் இன்னும் சில ஆண்­டு­களில் பெளத்த மதம் அழி­வ­டையும். மத்­திய கிழக்கில் இருந்து தற்­போது சுமார் ஆயி­ரத்­திற்கும் அதி­க­மாக முஸ்லிம் குடும்­பங்கள் வந்­துள்­ளன. இவர்­களின் தீவி­ர­வாதக் கொள்­கை­யினை இங்­குள்ள அப்­பாவி முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ரி­டமும் பரப்பி அவர்­க­ளையும் பிரி­வி­னை­வா­தி­க­ளாக்­கு­வதே அவர்­களின் முக்­கிய குறிக்­கோ­ளாகும். இதனை ஜனா­தி­பதி புரிந்து கொள்­ளாது தான்­தோன்­றித்­த­ன­மாக ஆட்சி நடத்­தக்­கூ­டாது.
அதேபோல் நாட்டில் ஓர் பிரதான மதக் கொள்­கை­யினை வைத்தே ஆட்சி நடத்த வேண்டும். இங்கு பல மதத்­தவர் வாழ்ந்­தாலும் பெளத்­தத்­திற்கே முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும். இதனை வலி­யு­றுத்த அர­சாங்­கத்­திலும் ஒரு­வரும் இல்லை சிறந்­த­தொரு எதிர்க்­கட்­சியும் இல்லை.
அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து நாட்டின் இறை­மையை பாது­காத்து செயற்­பட வைக்கும் எதிர்க்­கட்­சி­யாக ஐக்­கிய தேசி­யக்­கட்சி செயற்­ப­ட­வில்லை. அவர்­களின் கட்சி சிக்­கல்­க­ளையும் சர்­வ­தேச உற­வு­க­ளை­யுமே பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். இப்­போதே இவ்­வா­றான நிலை­மை­யென்றால் ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆட்சி நடத்­தினால் ஒரே நாளில் நாடு அழிந்து விடும்.
நாம் நினைத்தால் ஒரே நாளில் அர­சாங்­கத்­தினை மாற்றி அமைத்து பெளத்த மதத்­தி­னையும் சிங்­க­ள­வர்­க­ளையும் காப்­பாற்ற முடியும். ஒரே நாளில் லட்­சக்­க­ணக்­கான மக்­களை ஒன்­றி­ணைத்து செயற்­பட முடியும். அதேபோல் ஒரு வேளை நாம் ஆட்­சி­ய­மைத்தால் நாட்டின் நிலை­மை­யினை மாற்­றிக்­காட்ட முடியும். ஆனால் நாம் அதை எதிர்­பார்க்­க­வில்லை. பெளத்த தர்­மத்தின் படியே நாம் செயற்­பட்டு வரு­கின்றோம்.(v)

Web Design by Srilanka Muslims Web Team