முஸ்லிம் பகுதிகளில் தொடர் மின்னொளி சுற்று போட்டிகளால் சீரழியும் இளைஞர் மற்றும் மாணவர் சமூகம் » Sri Lanka Muslim

முஸ்லிம் பகுதிகளில் தொடர் மின்னொளி சுற்று போட்டிகளால் சீரழியும் இளைஞர் மற்றும் மாணவர் சமூகம்

cri6

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் அட்டாளச்சேனை பிரதேசங்களில் தொடர்ச்சியான இரவு நேரச் சுற்றுப் போட்டிகள் நடைபெறுவதால் இச் சுற்றுப்போட்டிகளை காரணமாக வைத்து இரவு நேரங்களில் சிறுவர்கள், இளைஞர்கள் போதைப் பழகத்திற்கு மிக இலகுவான முறையில் தங்களை பழக்கப்படுத்திக் கொள்கின்றார்கள்.

அதிகமான மாணவர்கள் இச்சுற்றுப் போட்டிகளை பார்வையிட வரும் நோக்கில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்களோ என்ற அச்சமும் எம் பெற்றோர்கள் மத்தியில் இருக்கின்றது

மேலும் பல இளைஞர்கள் இரவு நேரங்களில் ்போட்டிகளை பார்வையிட வருகின்றவர்கள் தலைக்கவசம் இன்றி வேகமான முறையில் வாகனத்தை செலுத்தி மரணத்தை மிக இலகுவான முறையில் சம்பவிக்கின்றனர்.

ஆகவே பெருமன் கொண்டு இரவு நேரச் சுற்றுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்குவதை தவிர்த்து பகல் நேர சுற்றுப் போட்டிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கி இளைஞர்களை போதைப் பழகத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கு உதவி புரியுமாறு மிகத் தாழ்மையுடன் பெற்றோர் வேண்டுகோள் விடுகின்றனர்

மேலும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுத்திகாரி மாநகர ஆணையாளர்
பிரதேச சபை செயலாளர்கள்
பாடசாலை அதிபர்கள் மின்னொளி சுற்று போட்டிகளை தவிர்க்க அல்லது இடைநிறுத்த நடவைடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர் வேண்டுகோள் விடுகின்றனர்

Web Design by The Design Lanka