முஸ்லிம் பெண்ணும் சிங்கள இளைஞனும் ரயிலில்.....!!!! » Sri Lanka Muslim

முஸ்லிம் பெண்ணும் சிங்கள இளைஞனும் ரயிலில்…..!!!!

IMG_20170811_092438

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அன்பின் இஸ்லாமிய சொந்தங்களே!

நான் கீழே பதிந்துள்ள ஒரு போடோ அவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டு போட்டு உள்ளேன்

ஒரு முஸ்லிம் பெண்மணியும் பௌத்த மதத்தை சேர்ந்த ஒரு வாலிபனும் ஒரு ரயில் (TRAIN) இல் பயனிக்கும் போது தவறான முறையில் நடந்து கொண்டதாக சில போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றது

இப்படி இது போன்றவைகளை பரப்பக்கூடியவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்

நாம் சிந்திக்க வேண்டியது இதுவே என் கூட பிறந்த சகோதரி/சகோதரன் இப்படி நடந்து இருந்தால் நாம் இதை பரப்புவோமா???

அந்த நேரத்தில் மட்டும் அவர்களின் மானம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அதை பாதுகாக்க பார்ப்போம் அல்லவா??

இப்படியாக நம் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஆண்களோ,பெண்களோ தவறான முறையில் நடப்பார்கள் என்றால் ஆதாரத்திற்காக போட்டோவோ,வீடியோவோ எடுப்பதில் தவறில்லை (அவர்களின் பெற்றோர்களுக்கு காட்டுவதற்காக)

அதை பரப்பி விடாமல் அதை எப்படியான முறையில் அனுக வேண்டுமோ அப்படி அனுக வேண்டும்

அதாவது சம்பந்தப்பட்டவர்களையே தொடர்பு கொண்டு இந்த செயலின் விபரீதத்தை விளக்கலாம்

அது முடியாமல் போகும் பற்சத்தில் அவர்களின் பெற்றோர்களுக்கு எப்படியாவது இந்த தகவலை எத்தி வைக்கலாம்

இப்படியான முறைகளை கையாலாமல் அவர்கள் என்ன தவறு தான் செய்தாலும் அவர்களின் மானங்களை போக்க நாம் தயாராகி விட்டோம் என்றால்

கண்டிப்பாக இவ்வுலகிழும் நாளை மறுமையிலும் அல்லாஹ் நம்மை இழிவு படுத்தியே தீருவான் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்காத வரையில்

இப்படியான விடயங்களில் நாம் நிதானத்தை கடை பிடிக்காமல் ஒரு பெண்ணின் வாழ்கையில் விளையாடுகிறோம்

மனிதன் என்பவன் தவறுக்கும்,மறதிக்கும் இடைப்பட்டு படைக்கப்பட்டவன் (புஹாரி)

இப்படி ஒவ்வொருவரும் அன்றாடம் செய்யும் தவறுகள் செய்வதை போட்டோக்கள் வீடியோக்கள் எடுத்து போட்டால் எப்படி இருக்கும்???

இப்படியான முறையில் தவறுகள் செய்பவர்களை திருத்த முயற்சிப்பதை விட்டு விட்டு கேவலப்படுத்த,மானபங்கப்படுத்த முயிற்சிப்பதால் தான் தற்கொலைகளும்,கொலைகளும் ஏறாளம் பெருகி வருகின்றது

அல்லாஹ்வை அஞ்சி அனைத்து விடயங்களிலும் நிதானத்தை கடைபிடிப்போம்

இப்படிக்கு
ஸாஜித் அஹமட் கியாஸ்தீன்
மஸ்ஸல,பேருவளை

IMG_20170811_092438

Web Design by The Design Lanka