முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கு இடைஞ்சல் ; 2002 இல் ஹக்கீம் - பிரபா ஒப்பந்தம் ! 2018 இல் ஹக்கீம் - டயஸ்போரா ஒப்பந்தம் !! » Sri Lanka Muslim

முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கு இடைஞ்சல் ; 2002 இல் ஹக்கீம் – பிரபா ஒப்பந்தம் ! 2018 இல் ஹக்கீம் – டயஸ்போரா ஒப்பந்தம் !!

34782965_1928248830527353_6522086926227341312_n

Contributors
author image

A.H.M.Boomudeen

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள் நிறைவடைந்து விட்டன.
1990 களில் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அந்த மக்களை 2009 யுத்த நிறைவுக்குப் பின்னர் அவர்களது சொந்த பூமியிலேயே மீள்குடியேற்றி விடலாம் என்ற கனவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டம் வரையும் இடைஞ்சல்களே ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஆரம்பித்த அந்த மக்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு , அவ்வப்போது ஆட்சி பீடம் ஏறிய சிங்கள அரசுகளால் உதாசீனம் செய்யப்பட்டு பின்னர் பெரும்பான்மையின இனவாத அமைப்புக்களால் துவம்சம் செய்யப்பட்டு – புலிகளின் ஏஜென்டுக்களான டயஸ்போராக்களாலும் அவர்களது பண முதலைகளுக்கு ஆசைப்பட்ட – அடிமைப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களால் தடையேற்படுத்தப்பட்டு இப்போது அந்த மக்களின் சொந்த இனத்தைச் சேர்ந்த ஹுனைசாலும் ஹக்கீமாலும் இடைஞ்சல் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

வடமாகாண முஸ்லிம்களைப் பற்றிப் பேச 2002 இற்கு பிற்பாடு முகா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எந்தவொரு அருகதையும் இல்லை என்ற பிரபா – ஹக்கீம் ஒப்பந்தம் சான்றாக இருக்கும் போதும் கூட இன்னும் இன்னும் அம்மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அவர் இடைஞ்சல்களையே ஏற்படுத்தி வருகின்றார்.

வடமாகாண மக்களின் மீள்குடியேற்றத்திற்காக
அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க நிறுவப்பட்ட – அமைச்சர்களான சுவாமிநாதன் , பைஸர் முஸ்தபா மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோரை அங்கத்தவர்களாகக் கொண்ட
North Rehabilitation Task Force { NRTF} என்ற நிறுவணத்தில் தன்னையும் அங்கத்தவராக இணைக்குமாறு ஹக்கீம் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அடம்பிடித்தமை என்பது மிக அநாகரிகமான செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் 2002 இல் அவரிடம் காணப்பட்ட மனோநிலையிலேயே இப்போதும் அவர் இருக்கின்றார் என்பதற்கு இந்த நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டாகவும் உள்ளது.

அதுமட்டுமன்றி, வடக்கு முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் அசிரத்தை காட்டும் சிங்கள அரசுகளுக்கு ஹக்கீமின் இந்த செயற்பாடு மேலும் உச்சாகத்தையே ஏற்படுத்தப் போகின்றது.

அமைச்சர்களைக் கொண்ட மேற்படி நிறுவகம் அமைக்கப்படும் போது வாய் பொத்தி அமைதியாக இருந்து புதினம் பார்த்த ஹக்கீம் – இதுகாலவரை அந்த நிறுவனம் பற்றி எதுவும் பேசாத ஹக்கீம் திடீரென்று சம்பந்தமே இல்லாமல் கடந்த அமைச்சரவையின் போது ” தன்னையும் உள்வாங்குமாறு” அடம்பிடித்தமையின் பின்னனிதான் என்ன?

பிரபாவுடன்இணைந்து அநீதி இழைத்த ஹக்கீம் இப்போது புலிகளின் தலைவர் பிரபாவின் ஏஜென்டுகளான டயஸ்போராக்களுடன் இணைந்து அந்த மக்களுக்கு அநீதி ஏற்படுத்த முயற்சிக்கிறாரா? அல்லது ரோவிடம் எதனையும் பெற்றுக் கொண்டு தமிழ் கூட்டமைப்பின் கைபொம்மையாக செயற்படுகின்றாரா? போன்ற கேள்விகள் இன்று முஸ்லிம் சமூகத்திலிருந்து எழுவது ஒன்றும் ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல.

2002 இல் கிளிநொச்சியில் வைத்து கைச்சாத்திடப்பட்ட ஹக்கீம் – பிரபா ஒப்பந்தம் என்பது வடக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அம் மக்கள் மீது எழுதப்பட்ட அடிமைச்சாசனம் மட்டுமன்றி ஜென்மத் துரோகமுமாகும்.

“இடம்பெயர்ந்தோர்” என அம்மக்களை எழுத்தில் வடித்து ஹக்கீம் கையொப்பம் இட்டது என்பது பிரபாகரனுக்கு அன்று கிடைத்த சர்வதேச ரீதியாக அவரை குற்றமற்றவர் என முஸ்லிம்களின் தலைவரே நற்சான்றிதழ் வழங்கி விட்டார் என பிரபா தப்பித்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட பொறி முறையாகும்.

ஹக்கீம் – பிரபா சந்திப்பு மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வுக்கு இரு தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி – வட்டக்கச்சியில் பிரபாகரன் நடாத்திய சர்வதேச ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட என்னால் , ” இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தாவது வடமாகாண முஸ்லிம்களை மீள்குடியேற வருமாரு அழைப்பு விடுங்கள் ” என்று கேட்கப்பட்டபோது – அதற்கு பதில் வழங்காத பிரபாகரனும் அண்டன் பாலசிங்கமும் ” நாளை மறுநாள் ஹக்கீம் வருகின்றார். அவரை சந்தித்து விட்டு அழைப்பு விடுப்போம் ” என்றனர்.

( ஆதாரம்…வீடியோ இணைப்பு )
அதேபோல் – பிரபாகரன் – ஹக்கீமை சந்தித்து இடம்பெயர்ந்தோர் என ஒப்பந்தம் செய்தார். ஆக, வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்றும் விடயத்தில் பிரபாகரனுக்கு உடன்பாடு இல்லை. அதனை அழகாக ஹக்கீமைக் கொண்டு பிரபா காய்நகர்த்தினார். அப்படிப்பட்ட பிரபாவின் ஏஜென்டுகளான டயஸ்போரா மற்றும் தமிழ் கூட்டமைப்புடன் தான் இப்போது ஹக்கீம் கூட்டுச் சேர்ந்து புதிய அத்தியாயத்தை கடந்த அமைச்சரவையிலிருந்து ஆரம்பம் செய்துள்ளார்.

“இடம்பெயர்ந்தோர் ” என்பதற்கும் “வெளியேற்றப்பட்டோர்” என்பதற்கும் இடையிலுள்ள பாரிய வித்தியாசத்தையும் அர்த்தத்தையும் நன்கு புரிந்து கொண்டவராகத்தான் ஹக்கீம் அப்போது பிரபா தயாரித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

பிரபா – ஹக்கீம் ஒப்பந்தம் என்பது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தம் , ஆவணமாகும்.அதனால்தான் சர்வகதேசமும் – சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் ” தானாக இடம்பெயர்ந்தோருக்கு எதற்காக நாம் உதவவேண்டும் ” என்று கேள்வி எழுப்பி உதவிகளை வழங்க மறுக்கின்றன. அதன் பின்னனியில்தான் , சிங்கள அரசுகளும் சில ஐரோப்பிய நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் இன்னோரன்னோனும் அம்மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அலட்சியம் காட்டுவதும் எதிர்ப்பு தெரிவிப்பதுமாகும்.

எனவே ஹக்கீமீன் இந்த தரோகம் என்பது – வடக்கு முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை பச்சையாக மீறியது மட்டுமன்றி அம்மக்களின் கௌரவமான மீள் குடியேற்றத்திற்கும் – உரிய நஷ்டஈட்டை பெறுவதற்கும் வைக்கப்பட்ட அழுத்தமான ” ஆப்பு ” என்றால் அது மிகையன்று.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்த பிரபா – ஹக்கீம் ஒப்பந்தத்தை செயலிழக்கம் செய்து – வரிதற்றதாக்கி வடக்கு முஸ்லிம்களை தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் மீள்குடியேற்றி வாழவைக்கும் போராட்டம் தான் – அந்த மக்களின் ஏக பிரதிநிதியான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 2002 இல் இருந்து இற்றை வரை முன்னெடுக்கும் போராட்டமாகும்.

Web Design by The Design Lanka