முஸ்லீம்களின் குரலாக ஒழித்து பல தடைகளையும் தாண்டி போராடும் ஒரே தலைமை அமைச்சர் றிசாத் - அப்துல்லா மஹ்ரூப் எம்.பி » Sri Lanka Muslim

முஸ்லீம்களின் குரலாக ஒழித்து பல தடைகளையும் தாண்டி போராடும் ஒரே தலைமை அமைச்சர் றிசாத் – அப்துல்லா மஹ்ரூப் எம்.பி

abdullah

Contributors
author image

Hasfar A Haleem

எமது சமூகத்தின் குரலாக முஸ்லீம்களுக்கு ஏற்படும் அநீதி தொடர்பில் தட்டிக் கேட்கும் ஒரே தலைமையாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இருக்கின்றார்.என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் நேற்று (04) கிண்ணியாவில் இடம் பெற்ற அரசியல் கூட்டமொன்றில் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில் இந்த நாட்டில் எந்த பாகத்திலும் சரி முஸ்லீம்களுக்கு ஏற்படும் அநீதிகளை தட்டிக் கேட்கும் குரலாக முதல் மனிதராக அங்கு களத்தில் எமது சமூகத்தின் குரலாக ஒழிப்பவர் அமைச்சர் றிசாத் பதியூதின் என்பதை யாராலும் மறைக்க முடியாது.

இந்த மண் கடந்த பல வருட காலமாக மேய்ச்சல் தரை மீனவர்கள் பிரச்சினை என பல பிரச்சினைகளை காண்கிறது இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் உங்களுடைய வாக்கு பலம் எமக்கு தேவைப்படுகிறது மயிலுக்கு வாக்களித்து எமது தலைமையின் கையை பலப்படுத்துவதன் மூலம் இப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்பதுடன் இப்பகுயின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபாவையும் ஒதுக்கவுள்ளேன்.

மேலும் கடந்த காலங்களில் கிண்ணியாவில் 2700 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை அமைச்சரின் பண உதவியுடன் செய்திருக்கிறோம்.அது மாத்திரமல்ல கடந்த வருடத்தில் 320 மில்லியனை திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கு ஒதுக்கியிருக்கிறோம்.இவ்வாறாக பல சேவைகளை எமது மண்ணுக்கு செய்திருக்கிறோம்.

இதை விடுத்து சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் வீடு வீடாக அலைந்து திரிந்து அவர்களை வாக்கு கேட்டு தொந்தரவு படுத்துவதாகவும் அறியக் கிடைக்கிறது மக்கள் தற்போது விழிப்படைந்திருக்கிறார்கள்  அவர்கள் சரியான முடிவை எடுப்பார்கள் இம் மாஞ்சோலை மண் கடந்த பாராளுமன்ற தேர்தலில் எனக்கு அதிகமான வாக்குகளை அளித்தார்கள் இவ்வாறாக எமது சமூகத்தை பாதுகாக்க நாங்கள் உரிமைகளோடு வாழ்வதற்கு சிந்தித்து செயல்படுவோம் என்றார்.

Web Design by The Design Lanka