முஸ்லீம் கவுன்சிலுக்கு எதிராக நடவடிக்கை; ரணில், அனுரகுமாரவுக்கு 1வாரகால அவகாசம்- மாநாட்டில் BBS மிரட்டல் - Sri Lanka Muslim

முஸ்லீம் கவுன்சிலுக்கு எதிராக நடவடிக்கை; ரணில், அனுரகுமாரவுக்கு 1வாரகால அவகாசம்- மாநாட்டில் BBS மிரட்டல்

Contributors
author image

Editorial Team

ரணில் விக்கிரமசிங்க அனுரகுமார திசநாயக்காவிற்க்கு ஒரு வார கால அவகாசத்தை வழங்கியுள்ள பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசாரதேரர் முஸ்லீம் கவுன்சிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

 

இன்று கொழும்பில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் அவர் இந்த மிரட்டல்களை விடுத்துள்ளார்.

 

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கத்திற்க்கு எச்சரிக்கையை விடுத்துள்ளோம்.

 

இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழர்களின் ஆதரவையும் பெற முயலுவோம்,

 

மியன்மார் மதகுரு விராதுவின் இலங்கை வருகையை தடுக்க முயன்றதற்காக முஸ்லீம் கவுன்சிலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.

 

பொதுபலசேனா எதிர்பார்க்கும் மாற்றத்தை கொண்டுவருவதற்காக ரணில் விக்கிரமசிங்கவிற்க்கும், அனுரகுமார திசநாயக்காவிற்க்கும் ஒரு வார கால அவகாசத்தை வழங்கியுள்ளோம். அல்லது அவர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

 

எமது சிந்தனைகள் பண்டாரநாயக்கா வினுடைய சிந்தனைகளாவோ, டி.எஸ் சேனநாயக்கா வினுடையதாகவோ இருக்க முடியாது- அவை புத்தரின் சிந்தனைகள்.என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

முஸ்லீம்கள் தொடர்பாக உள்ள கரிசனைகள் குறித்து முஸ்லீம் தலைவர்களை விவாதமொன்றிற்க்கு அழைத்துள்ள அவர் நீதியான சமூகத்திற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் மாதுளவாவே சோபித தேரரை கடுமையாக விமர்சித்துள்ளதோடு துரோகி எனவும் குறிப்பிட்டுள்ளார்.(GTN)

Web Design by Srilanka Muslims Web Team