முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சின்னமான மரத்தை தெரிவுசெய்தவர்... - Sri Lanka Muslim

முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சின்னமான மரத்தை தெரிவுசெய்தவர்…

Contributors

-அஷ்ரப் ஏ சமத்

 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தில் கடந்த 2 தசாப்பதங்களாக  முஸ்லீம் நிகழ்ச்சியில் வரலாற்றில் ஓர் ஏடு சொல்லிவந்த  கலாபூஷனம் ஏ.சி.எம் புகாரி மௌலவியின் இலங்கை வானொலியில் வரலாற்றில் ஓர் ஏடுகளைச் சேகரித்து நூலாக இன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தி;ல் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு கல்விமான் எஸ்.எச்.எம் ஜெமீல் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக நீதிஅமைச்சரும்; ஸ்ரீ.ல.மு.காங்கரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், கௌரவ அதிதியாக அமைச்சர் பசீர்சேகுதாவுத், கலந்துகொண்டிருந்தனர்.

 

நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக்கொண்டார். கவிஞர் மன்சூர் ஏ காதர், சிறப்புச் சொற்பொழிவை அஷ;nஷய்க் எம். ரவுப் ஸெய்ன் (நளீமி) தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா, கொழும்பு பல்கழைக்கழக முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சந்திரசேகரன் ஏற்புரையை ஏ.சி.எம்.புகாரியும் ஆகியோறும் இந் நிகழ்விpல்  உரையாற்றினார்கள்.

 
இங்கு உரையாற்றிய அமைச்சர் பசீர் சேகுதாவுத் –

 

இந்த கட்சியான முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சின்னமான மரத்தை தெரிவுசெய்தவர்  இந்த ஏ.சி.எம் புகாரியே மௌலவிதான் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் கட்சியை ஆரம்பித்து கட்சியின் சின்னத்தை தேர்ந்தெடுக்க கூட்டத்தின்போது புகாரி மௌலவியே குர்ஆனில் உள்ள ஒரு ஆயத்தை நினைவுபடுத்தி இந்த மரச் சின்னத்தை தலைவர் அஸ்ரபுக்கு தோந்தெடுத்துக் கொடுத்தவர்.

 

அமைச்சர் றவுப் ஹக்கீம் –

 
மறைந்த தலைவர்  அஸ்ரப் அவர்கள் முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினராக வந்தபோது எனக்கு பாராளுமன்ற செயலாளராக நியமித்தார்கள். அதன் பின் தலைவர் அவர்கள் புகாரிமௌலவி அவர்கள் தனது அரச தொழில் நிமித்தம் அந்தப் பதவியை அவருக்கு விட்டுக்கொடுக்கச் சொன்னார் அன்றில் இருந்து எங்களது தொடர்பு இருந்து வந்தது.

 

 இப்போதேல்லாம் வானொலி முஸ்லீம் நிகழ்ச்சி ஒரு வர்த்தகப்பொருளாக மாறிவிட்டது. அன்று 1 மணித்தியாலய நிகழ்வு எவ்வளவு பெறுமதி வாய்ந்தது.  இன்று முழுநாளும் நடைபெறும் நிகழ்வு எவ்வித பிரயோசனமற்றதாகவே கேட்கக் கூடியதாக உள்ளது. சகல நிகழ்ச்சிகளும் வர்தகமயமாக்கி விட்டது.

 

அன்று வானொலியில் அஸ்ரப்ஹானின் நாடகம், மஹதியஸ் இப்ராகீமின் முஸ்லீம் நிகழச்சிகள் நல்ல தரமாக இருந்தது அந்த வரிசையில் 70, 80 களில் புகாரி மௌலவியின் வரலாற்றில் ஓர் ஏடு பற்றி நானும் பாடசாலைகளில் கற்கின்ற காலத்தில் அதனை தேடி படித்து அவர் போன்று உச்சரிப்பது அவ் வசனங்களை தேடி வானொழிக்கு எழுதி அனுப்பிய ஞாபகம் இருக்கின்றது.  

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

 

 

Web Design by Srilanka Muslims Web Team