முஸ்லீம் தனியார் சட்டமும் மாற்றத்தை நோக்கிய சந்தேகங்களும்?? » Sri Lanka Muslim

முஸ்லீம் தனியார் சட்டமும் மாற்றத்தை நோக்கிய சந்தேகங்களும்??

muslim

Contributors
author image

Fahmy Mohideen

இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் முஸ்லீம் தனியார்சட்டம் 1770ம் ஆண்டு டச்சுக்காரர்களால் இந்தனோஷியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டது.1806 இற்கும் 1951ம் ஆண்டுக்கும் இடையில் பலமுறை மாற்றங்கள்,திருத்தங்களைக் கடந்து 1951ல் சட்டமாக உருவானது.இருந்தும் இதில் அதாகமான இஸ்லாமிய ஷரீஆக் கோட்பாடுகளுக்கு முரணாக விடயங்கள் உள்ளது.குறிப்பாக சீதனம்,கைக்கூலி போன்ற சில ஏற்பாடுகளைக் கூறலாம்.

இலங்கை முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் 1951ம் ஆண்டு இலங்கையில் சட்டபூர்வமாக நடவடிக்கைக்கு வந்தது.இலங்கை முஸ்லீம் தனியார் சட்டம் தொடர்பான சட்டம் சீரமைக்கப்பட/மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது.இருந்தும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் வேகமான சீர்சிருத்தங்கள் மற்றும் அதிரடியான நடவடிக்கைகளால் முஸ்லீம் தனியார் சட்டம் தொடர்பில் மாற்றங்களை நோக்கிய நம்பிக்கையை ஓரளவு அதிகரித்துள்ளது.

குறிப்பாக 2009ம் ஆண்டும் அதற்குப் பின்னர் வந்த அரசாங்கமும் இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமிக்கப்பட்டது.ஆனாலும் பல்வேறு விமர்சனங்களாலும் அரசியல் அழுத்தங்களாலும் முன்னேற்றகரமான எந்த நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை.

உண்மையில் காலப்போக்கில் உருவான பல்வேறு மாற்றங்களுக்கு மத்தியில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கொள்கை ரீதியாக இலங்கையில் உருவான வேகமான வளர்ச்சிகளால் முஸ்லீம்களுக்கு மத்தியிலும் இந்தச்சட்ட சீர்சிருத்தத்தின் அவசியம் உணரப்படுகிறது.அதேநேரம் சிறுவயதில் திருமணம்,ஒருதலைப்பட்ட விவாகரத்து,திருமணத்தின் பின்னரான பலாத்கார பாலியல்,பலதாரத்திருமணம் மற்றும் பெண்களுக்கு எதிரான செயற்பாடுகளில் சட்டத்தில் இருக்கினற பாகுபாடு தொடர்பில் பலரால் விமர்சிக்கப்படுகிறது.
குறிப்பாக சர்வதேச மற்றும் பெண்ணிலைவாதிகள் விமர்சித்தாலும்,இஸ்லாமிய மற்றும் குர்ஆன் அடிப்படையில் வாழ்கின்ற நமது சமூகத்தில் நமது குர்ஆன் ஹதீஸ்களுக்கு முரண்படாத வகையில் இதனை நோக்குவது அவசியமாகும்.

GSP வரி
———–
வெளிநாட்டு சக்திகளின் கைபொம்மையாகி நாட்டில் நல்லாட்சி பற்றிப் பேசும் தற்போதைய அரசு GSP வரிச்சலுகை பெறுவதற்காக ஐரோப்திய யூனியனின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்தது.இதில் இலங்கை முஸ்லீம் தனியார் சட்டத்தை சீர்சிருத்த 17 முஸ்லீம் பிரதிநிதிகளை உள்ளடக்கி முன்னால் நீதிபதி சலீம் மர்சூப் தலமையில் அறிக்கை சமர்ப்பிக்க குழுவை நியமித்தது.இந்த ஐரோப்பாய யூனியனின் நிபந்தனையின் பின்னனியில் பலசக்திகள் இருந்தாலும்,இலங்கையில் இருக்கின்ற சில முஸ்லீம் கல்விமான்களும் வெளிநாட்டு சக்திகளின் முகவர்களாக இருந்து செயற்படுவது காணக்கூடியதாக உள்ளது.

இஸ்லாமிய கோட்பாட்டுக்குள் வாழமுடியாத சிலமுஸ்லீம் பெயர்தாங்கிப் பெண்கள் மனித உரிமை என்ற சுலோகத்துடன் முஸ்லீம் தனியார் சட்டத்தை விமர்சிக்கின்றனர்.உண்மையான முஸ்லீமாக வாழ்வதற்கு இலக்கணமற்ற படித்தவர்கள் கூட மார்க்கத்தையும் சட்ட சீர்சிருத்தத்தையும் காட்டிக் கொடுப்பது ஆச்சரியமாக உள்ளது.

இலங்கையில் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு எதிராக செயற்பட்டதில்லை.தனிநாடோ,தனி அதிகாரமோ கேட்கவில்லை.மாறாக நாம் கடைப்பிடிக்கின்ற குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் வாழ்வதற்கான அதிகாரத்தை,குறிப்பாக திருமணம்,பிள்ளைகள் மற்றும் மார்க்க விடயங்களில் சட்டரீதியான பாதுகாப்பை இந்தச்சட்டம் மூலம் பெறுகின்றனர்.அதிலும் அரசியலமைப்பு மற்றும நாட்டின் இறமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இந்த தனியார் சட்டத்தை சுமார் 68வருடங்களாக பின்பற்றி வருகின்றனர்.

இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் முஸ்லீம் தனியார்சட்டம் 1770ம் ஆண்டு டச்சுக்காரர்களால் இந்தனோஷியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டது.1806 இற்கும் 1951ம் ஆண்டுக்கும் இடையில் பலமுறை மாற்றங்கள்,திருத்தங்களைக் கடந்து 1951ல் சட்டமாக உருவானது.இருந்தும் இதில் அதாகமான இஸ்லாமிய ஷரீஆக் கோட்பாடுகளுக்கு முரணாக விடயங்கள் உள்ளது.குறிப்பாக சீதனம்,கைக்கூலி போன்ற சில ஏற்பாடுகளைக் கூறலாம்.

அந்தவகையில் இலங்கை முஸ்லீம் தனியார் சட்டத்தில் விமர்சனத்திற்கு அதிகம் உள்ளாகுவது பின்வருபவையாகும்:

1-பெண்ணின் குறைந்ததிருமண வயது நிர்ணயிக்கப்படவில்லை.இதன்படி காதிநீதிபதி 12வயதுக்கு உற்பட்டவரையும் அனுமதக்கலாம்.
2-திருமணத்திற்கு பெண்ணிடம் அனுமதி பெறுவதற்கான எந்த நிபந்தனையும் இல்லை.ஆதலால் வற்புறுத்தி திருமணம் செய்யலாம்.
3-விவாகரத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபட்ட நடமுறை உள்ளது.ஆண்களுக்குச் சாதகமான நிலை.பெண்களை தொடர்ந்து தனிமைப்படுத்துவதும் காலத்தை வீணடிப்பதும்.
4-தாய் மற்றும் பிள்ளை பராமரிப்பை தீர்மானிக்கும் தற்றுணிவு அதிகாரம் காதிநீதிபதிக்கு உள்ளது.
5-பெண்கள் காதிநீதிபதியாகவோ,காதிநீதிமன்ற உறுப்பினராகவோ,திருமண பதிவாளராகவோ செயற்படமுடியாது.இது பெண்களுக்கு பாரபட்சமானதும் ஓரங்கட்டப்பட்டதுமாகும்.
6-மனைவியின் அனுமதியில்லாமல் இன்னொரு திருமணமோ,உறவோ வைத்திருக்க ஆணுக்கு சட்டம் சாதகமாக உள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் பிரிவு 16(1) எழுதப்பட் மற்றும் எழுதப்படாத சட்டங்கள் யாவும் இந்த அரசயலைப்பிற்கு முன்னர் இருந்தாலும் அவை சட்டபூரவமாகவும் செயற்பாடுடையதாகவும் இருக்கும்.அடிப்படை உரிமைகளுக்கு முரணாக இருந்தாலும் அவை உத்தரவாதமாகும்.அந்த வகையில் 1978ம் ஆண்டு அரசியலமைப்பிற்கு முன்னதாக பின்பற்றிய சுமார் 600எழுதப்படாத சட்டங்கள் இன்றும் அதிகாரமுடையதாகவே உள்ளது.உதாரணமாக குற்றச்சட்டக்கோவை,முஸ்லீம்தமியார்சடறடம்,கண்டசய திருமணச் சட்டம் மற்றும் தேசவமைச் சட்டம் போன்றவை.

ஆகவே இந்தச் சட்டப் பிரிவின் மூலம் 1978ம் ஆண்டுக்கு முற்பட்ட சகல எழுதப்படாத சட்டங்கள் மற்றும் வழக்காறுகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில்,முஸ்லீம் தனியார் சட்டத்திற்கு புடியஅரசியலமைப்பில் தனியான மாற்றம் தேவையா?முஸறலீம்கள் திருமணம் மற்றும் விவாகரத்து விடயங்கள் தங்களின் மார்க்க வரம்பிற்குள் செயற்படுவதில் தவறு என்ன?ஏனெனில் வர்த்தகம் ,ஒப்பந்தங்கள் மற்றும் இதரசகல விடயங்களிலும் முஸ்லீம்கள் ஏனையவர்களுக்கான சட்டங்களையும் நடமுறைகளையும் பின்பற்றுகின்றனர்.

முஸ்லீம்கள் ஒருபோதும் தமது நாளாந்த வாழ்க்கையின் சகல விடயங்களும் ஷரீஆ சட்டத்திற்கு அமையவேண்டுமென்று கேட்பதில்லை. இருக்கின்ற அரசியலமைப்பின் வரையறைக்குள் வாழ்கின்ற முஸ்லீம்களுக்கு இந்த தனியார்சட்டம் மேலதிக பாதுகாப்பை வழங்குகிறது.இந்தச்சட்டம் பெண்களுக்கு எதிரானது,பாரபட்சமானது என்று இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணானவர்கள் விமர்சிப்பது இஸ்லாத்திற்கு எதிரான கண்ணோட்டமே தவிர இஸ்லாமிய பெண்கள் மீதுள்ள அக்கரையல்ல.இருந்தும் இஸ்லாமிய சட்டநெறி(Islamic Jurisdiction) மற்றும் ஷரீஆ சட்ட (Sharia Law) நடமுறைகளுக்கு முரணான விடயங்கள் நீக்கப்பட்டு,சமகால திருமண மற்றும் விவாகரத்து வியங்களில் நிலவுகின்ற சிக்கல்களுக்கு பதிலாக சீர்சிருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.குறிப்பாக காதிநீதிபதிகள் அதிகாரம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அதிகமான மாற்றங்கள் தேவையாக உள்ளது.

ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் வெறுமனே அதிகாரப்பகிர்வு என்பதில் முழுக்கவனத்தையும் செலுத்தி,சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதிலே கவனமாக உள்ளது.இந்த நிலையில் தற்போது இருக்கின்ற அரசியலமைப்பில் பாதுகாக்கப்பட்ட முஸ்லீம்களின் தனியார்சட்ட உரிமைகள் மேலும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.மாறக வெளிநாடுகளின் அழுத்தம் மற்றம் உள்நாட்டு தவிரகொள்கை உடையவர்களை திருப்திப்படுத்த முனைந்தால் புதிய அரசியலமைப்பு தோல்வியிலே முடிவடையும்.

Web Design by The Design Lanka