முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாகவே ரணில் என்னை அமைச்சரவையிலிருந்து நீக்கினார்..! - Sri Lanka Muslim

முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாகவே ரணில் என்னை அமைச்சரவையிலிருந்து நீக்கினார்..!

Contributors

17 முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாகவே ரணில்விக்கிரமசிங்க என்னை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறுவர்களிற்கு தீவிரமான முஸ்லீம் கொள்கைகளை கற்பித்தால் நாடு பின்னர் பயங்கரவாத ஆபத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பது ஒன்றும் புதிய விடயமல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

1970- 77க்கு பின்னரே சமூக மோதல்கள் உருவெடுத்தன,அதற்கு முன்னர் சிங்கள தமிழ் முஸ்லீம் மாணவர்கள் ஒரே பாடசாலையில் கல்விகற்று ஒரே விடயத்தினை கற்றார்கள்.

எனினும் 1970 களில் கல்வி அமைச்சர் பதியுதீன் முகமட் முஸ்லீம் மாணவர்களிற்கான தனியான பாடசாலைகளை உருவாக்கினார்.

இதன் காரணமாக முஸ்லீம் மாணவர்கள் முஸ்லீம் பாடசாலைகளிற்கு சென்றார்கள் அதன் பின்னர் கல்வி முறை தீவிரவாத தன்மை மிகுந்ததாக மாறுவதை கல்வி அதிகாரிகள்அவதானித்தார்கள்.

வஹாபி பாடசாலைகள் போன்றவை ஸ்தாபிக்கப்பட்டன.

மார்ச் 2019 க்குள் ஜஹ்ரான் அவ்வாறான ஆறு பாடசாலைகளை ஸ்தாபித்துவிட்டார், பாடசாலைகளில் தீவிரவாத கொள்கைகளை கற்ற மாணவர்கள் இறுதியில் பயங்கரவாத ஆபத்தை உருவாக்குவார்கள்.

தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையில் சிறிய வித்தியாசமே உள்ளது, இறுதியில் தீவிரவாதம் பயங்கரவாதமாக மாறுகின்றது.

நாங்கள் 30 வருட ஈழ யுத்தத்திலிருந்து இன்னமும் பாடம் கற்கவில்லை,

2016 நவம்பர் மாதம் 18 ம் திகதி நான் நாடாளுமன்றத்தில் வஹாபிசம் குறித்து எச்சரிக்கை செய்தேன்.அன்று முதல் நான் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டுள்ளேன்.

எனது நம்பிக்கையை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லாததால், நான் இரண்டரை வருடங்கள் காத்திருந்தேன்.

தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது,தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்க தவறியவர்கள் குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் இவ்வாறான தாக்குதல் குறித்;து பல வருடங்களி;ற்கு முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தேன்

2019 உயிர்த்தஞாயிறு தினத்தன்று கத்தோலிக்கர்களிற்கு புனிதமான தினம் இரத்த ஆறு ஓடும் நாளாக மாற்றப்பட்டது.

இலங்கையில் பயங்கரவாதம் இல்லை எனவும் வஹாபிசம் இல்லையெனவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தவர்களையும்- இல்லாத விடயங்களை கற்பனை செய்யக்கூடாது என தெரிவித்த ரிசாத் பதியுதீன்,ஹில்புல்லா,முஜிபூர் ரஹ்மான் ராஜித சேனாரட்;ண போன்றவர்களிடம் அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உயிர்களிற்கு பொறுப்பேற்க தயாரா என நான் கேட்கின்றேன்.

தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது,நாட்டில் இடம்பெறவுள்ள ஆபத்தை தடுப்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டது ஆனால் தகவலை தெரிவித்தவரை கல்லால் அடித்துள்ளது என்பதே அறிக்கையின் முடிவுகளில் ஒன்றாக காணப்படுகின்றது.

நான் இரண்டு வருடங்கள் ஐந்து மாதங்களிற்கு முன்னர் இந்த தகவலைதெரிவித்தேன்.

அன்றைய அரசாங்கம் எனக்கு எதிராக தாக்குதலை தொடு;த்தது,

அவ்வேளை நாடாளுமன்றத்தில் 17 முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்பட்டனர்,அவர்கள் நீதி அமைச்சர் பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்சவை வெளியேற்றாவிட்டால் தாங்கள் அமைச்சரவையிலிருந்து வெளியேறப்போவதாக ரணில்விக்கிரமசிங்கவை எச்சரித்தனர்.

நாட்டை விட பெரும்பான்மையை முக்கியமாக கருதுகின்றவர் ரணி;ல்விக்கிரமசிங்க – அவர் தனது பெரும்பான்மையை இழக்க விரும்பாததால் முஸ்லீம்களின் வாக்குகளை இழக்கவேண்டி வரும் என்பதால் அவர் என்னை அமைச்சரவையிலிருந்து நீக்கினார்.

ஜஹ்ரான் குழுவை இயக்கியவர்கள் ஹிஸ்புல்லாவும் ரிசாத் பதியுதீன் என நான் இன்றும் சொல்கின்றேன்,பயங்கரவாதிகளை பாதுகாத்தவர் முஜிபூர் ரஹ்மான் என நான் இன்றும் தெரிவிக்கின்றேன், பயங்கரவாதிகளிற்காக பொலிஸாரிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தியவர் அசாத் சாலி என நான்இன்றும் தெரிவிக்கின்றேன் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.(தினக்குரல்)

Web Design by Srilanka Muslims Web Team