முஸ்லீம் லீக் வாலிப முன்னணியினர் செனட்டர் மசூர் மௌலாவின் வீட்டுக்கு சென்று நலம் விசாரிப்பு - Sri Lanka Muslim

முஸ்லீம் லீக் வாலிப முன்னணியினர் செனட்டர் மசூர் மௌலாவின் வீட்டுக்கு சென்று நலம் விசாரிப்பு

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைமையகமான நாரேகேன் பிட்டியில் உள்ள அலுவலகத்தில் அதன் தலைவர் சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது.  

 

அடுத்த மாதம் வருடாந்த மாநாடு நடைபெறவுள்ளது. அடுத்த நடப்பு ஆண்டுக்கான தேசியத்  தலைவராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த  எம். உதுமாலெப்பை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

இக் கூட்டத்தின் முடிவில் இவ் இயக்கத்திற்காக மர்ஹூம் பாக்கீர் மாக்காரோடு சேர்ந்து நாடுபூராவகவும் உழைத்த  செனட்டர் மசுர் மொளலானாவை  அவரது மாளிகாவத்தை இல்லத்திற்குச் சென்று பார்வையிட்டார்கள். அவர் மரணப்படுக்கையிலும் தமது அரசியல் மேடை மற்றும் ஆத்மீக பேச்சுக்களையும் உச்சரித்த வண்னமே உள்ளார்.

 

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், ரசீத் எம். இம்தியாஸ், என்.எம். அமீன், மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

Web Design by Srilanka Muslims Web Team