மு.கா.வுக்கு பிரதியமைச்சர் பதவி தேவையில்லை: ஹக்கீம் » Sri Lanka Muslim

மு.கா.வுக்கு பிரதியமைச்சர் பதவி தேவையில்லை: ஹக்கீம்

hqdefault

Contributors

hqdefault

(TM)

எனது கட்சிக்கு பிரதி அமைச்சர் பதவி தேவையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

அமைச்சரவையில் நாளை வியாழக்கிழமை மாற்றம் செய்யவிருப்பதாகவும் அதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு பிரதி அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு அமைச்சர் ஹக்கீம் அமெரிக்கா விஜயமாகியுள்ளார். இந்த விஜயத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டதாகவும் இதன்போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

தனது கட்சிக்கு இரண்டு பிரதி அமைச்சர் பதவி தேவையில்லை என்றும் பிரதியமைச்சர் பதவிகளை வழங்குவதாயின் மூன்று பிரதி அமைச்சு பதவி வழங்குமாறும் கோரிக்கைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka