மூதூர் கரையோரப் பாதுகாப்பு சம்பந்தமான விசேட கலந்துரையாடல் - Sri Lanka Muslim

மூதூர் கரையோரப் பாதுகாப்பு சம்பந்தமான விசேட கலந்துரையாடல்

Contributors

-மூதூர் முறாசில்-

மூதூர் கரையோரப் பாதுகாப்பு சம்பந்தமான விசேட கலந்துரையாடலொன்று  ஞாயிற்றுக் கிழமை மாலை  மூதூர் ஹபீப் நகர் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது கரையோரக் கிராமங்களைபாதுகாப்பது சம்பந்தமாக ஆரோக்கியமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதோடு முக்கியஸ்தர்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக கரையோரப் பாதுகாப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அத்தோடு, கரையோரப் பாதுகாப்பு சம்பந்தமான ஆரம்ப  களஆய்வை கையாள்வதற்கான உப குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.

கரையோரப் பாதுகாப்பு குழுவில்   பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர்: எஸ்.எச்.அமீர்,செயலாளர்: ஏ.எச்.லாபீர்,நிதியாளர்:எம்.ஏ.எம்.றபீக்,உப தலைவர்:கே.எம்.அஸ்ஹர், உதவிச் செயலாளர்:எம்.என்.முஸவ்பீர் ஆகியோரோடு கரையோரப் பாதுகாப்பு சம்பந்தமான ஆரம்ப  களஆய்வை கையாள்வதற்கான உப குழு    சிரே‘;ட பொறியியலாளர் எம்.ஏ.சி.எம்.ஜெஸீம் தலைமையில்   அமைக்கப்பட்டது.

மூதூர் கரையோரக் கிராமங்கள் சுனாமி தாக்கத்தின் பின்பு மிக மோசமாக கடலாpப்புக்கு உள்ளாகிவருவதோடு கடல் கொந்தளிபின் போது கடல் நீர்pனாலும் மூழ்கி வருகின்ற நிலையிலேயே கரையோரக் கிராமங்களை பாதுகாப்பதற்காக மூதூர் பிரதேச முக்கியஸ்தர்;கள் பலர்  ஒன்றிணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பீஸ் ஹோம் அமைப்பின் தலைவர் எஸ்.எச்.அமீர் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மூதூர் பிரதேச சபை  தவிசாளர் ஏ.எம்.ஹாPஸ்,சுகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர்,சிரேஷ்ட  பொறியியலாளர் எம்.ஏ.சி.எம்.ஜெஸீம்,டாக்டர் வை.எஸ்.எம்.சியா,பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத், நத்வதுல் உலமா அரபுக்கல்லூhp அதிபர் எம்.எம்.காPம் நத்வி, உமர் பாறுக் வித்தியாலய அதிபர் எஸ்.ஹஸ்ஸாலி,ஹக்கீம் வித்தியாலய அதிபர் வீ.எம்.நகீப், முன்னாள் மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்..றபீக், சமூக ஆர்வலர் ஏ.டபிள்யூஎம்.ஜிஹாத், உளவள உத்தியோகத்தர் எம்.ஜே.எம்.ஜெஸ்மி,சமூக ஆர்வலர் எம்.என்.முஸவ்பீர்  கரையோர சமுதாய அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் ஏ.எச்.லாபிர்,தடயம் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் எம்.ஏ.ஜவாஹிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

231

Web Design by Srilanka Muslims Web Team