மூதூர் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி: நொக்கியா அணி வெற்றி » Sri Lanka Muslim

மூதூர் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி: நொக்கியா அணி வெற்றி

t666

Contributors
author image

தோப்பூர் நிருபர் முஹம்மட் புஹாரி

மூதூர் உதைப்பந்தாட்ட லீக்கினால் நடாத்ததப்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை மாலை மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது.

இறுதிப் போட்டியில் நொக்கியா மற்றும் சனிமவுண்ட் ஆகிய அணிகள் மோதியதில் நொக்கியா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டினர்.

இறுதி போட்டியில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர், விசேட அதீதியாக மூதூர் உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவர் எம்.எஸ்.எம்.இர்பான் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

t-jpg2 t-jpg2-jpg3 t-jpg2-jpg3-jpg4

Web Design by The Design Lanka