மூதூர் தொகுதியில் நபிஹான் வெற்றி » Sri Lanka Muslim

மூதூர் தொகுதியில் நபிஹான் வெற்றி

a99

Contributors
author image

தோப்பூர் நிருபர் முஹம்மட் புஹாரி

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் ஆலோசணையின் பேரில் சிறிலங்கா இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை நாடாளா விய ரீதியில் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இடம் பெற்றது.

இதில் மூதூர் தொகுதியில் போட்டியிட்ட ஏ.கே.நபிஹான் 530 வாக்குகளை பெற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளதாக மூதூர் இளைஞர் சேவை அதிகாரி எம்.டீ.முபாரிஸ் தெரிவித்தார். இதன் போது வெற்றியீட்டி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்களால் மாலை அணிவிக்கப்பட்டு மூதூர் பிரதான வீதியூடாக அழைத்துவரப்பட்டார்.

a-jpg2

Web Design by The Design Lanka