மூதூர் தொகுதி ஒடுக்கப்பட்டு சேருவில தொகுதி விசாலம் அடையும் அபாயத்தை நிறுத்த வேண்டும்..! - Sri Lanka Muslim

மூதூர் தொகுதி ஒடுக்கப்பட்டு சேருவில தொகுதி விசாலம் அடையும் அபாயத்தை நிறுத்த வேண்டும்..!

Contributors
author image

எப்.முபாரக்

மூதூர் தொகுதி ஒடுக்கப்பட்டு  சேருவில தொகுதி விசாலம் அடையும் அபாயத்தை நிறுத்த வேண்டும். எம் முஸ்லிம்  சமூகத்தை வைத்தே எம் பிரதேச எல்லைகள் ஒடுக்கப்படும் சூனியத்திற்கு மாற்று வழி தேடவேண்டும் தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.
முள்ளிப்பொத்தானையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் வைத்து இன்று(6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:
திருகோணமலை மாவட்டத்தில் சேருவில பகுதியில் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்காக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன,மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு சரியான எல்லை இல்லை,எல்லைப் பகுதிகளில் வசிப்போர் எல்லை தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்,
கிண்ணியா மற்றும் சேருவில  பிரதேச செயலகப் பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
திருகோணமலை சன அடர்த்திப் பரம்பலில் இரண்டாம் இடத்தில் தமிழ் மக்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்,இவர்களை தள்ளி இரண்டாம் இடத்திற்கு சிங்கள மக்கள் வருவதற்கான முயற்சிகள் தான் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றன.இதற்கு சிங்களத் தலைமைகள் பக்க பலமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
இம்மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் முஸ்லிம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.அரசு இவ்விடயத்தில் நிதானமாக செயற்பட வேண்டும்,
அண்மையில் சேருவில கந்தளாய் பிரதான வீதியில் பெருமளவிலான காடுகள் அழிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team