மூதூர் பிரதேச சபைத் தேர்தல் ; தோப்பூரின் அதிகாரப் புறக்கணிப்பு ஒரு பார்வை » Sri Lanka Muslim

மூதூர் பிரதேச சபைத் தேர்தல் ; தோப்பூரின் அதிகாரப் புறக்கணிப்பு ஒரு பார்வை

mohamed thopur

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சட்டத்தரணி S.H முகமட் (நளீமி)


நடந்து முடிந்த பிரதேச சபைத் தேர்தலில் தோப்பூர் சார்பாக பல கட்சிகளிலிருந்து 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டும் தவிசாளரையோ அல்லது உதவி தவிசாலரையோ பெற முடியாத கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இப்படியான நிலையில் மூதூர் மஜ்லிஸ் ஷுரா சபையானது பல சுற்று பேச்சுவார்த்தை அடிப்படையில் கட்சிகள் மற்றும் பிரதேசங்களை அடிப்படையாக வைத்து ஆரோக்கியமான முடிவினை எடுத்தும் நிறைவேற்றமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

1.இந்த விடயத்தில் மூதூர் ஷுரா சபை தோப்பூர் ஷுரா சபையை உள்வாங்கியிருக்க வேண்டும்.

2. தோப்பூரில் ஷுரா சபை இதற்கான ஆரோக்கிமான முடிவினை எடுப்பதற்கு அதன் கட்டமைப்பை வியாபித்து தோப்பூரிற்கு அதிகாரம் கிடைக்கும் விடயத்தில் செயற்பட்டிருக்க வேண்டும்.

3. தோப்பூர் ஷுரா சபையானது தோப்பூர் சார்பாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை அழைத்து அதிகாரம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறையை சாத்தியப்படுத்துவதற்கான வியூகங்களை வகுத்திருக்க வேண்டும்.

■ தத்தமது கட்சி தலைமைத்துவங்களுக்கு அழுத்தங்களை வழங்குதல்

■ மூதூர் தோப்பூர் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக இரு ஷுரா சபைகள் இணக்கப்பாட்டுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

■ மூதூர் தோப்பூர் இணைந்த ஷுரா சபை கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை கையாள வேண்டும்.

4. மு.பா. உறுப்பினர் திடீர் தொளபீக் அவர்கள் சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற தொனிப் பொருளில் நடை பெற்ற கூட்டத்தில் ” மூதூர் மக்களே ! உங்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டுமென்றால் தோப்பூரிற்கு இம்முறை தவிசாளர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அரசியல் அநாதைகளாக ஆக்கப்படுவீர்கள்” என்று குறிப்பிட்டார். அவர்சார்ந்த தேசிய தலைமைத்துவம், மாவட்ட தலைமை மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஊடக எமது இலக்கை இலாவகமாக ஆக்கியிருக்கலாம்.

5. சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் முஸ்லீம் காங்கிரஸினால் மாகாண சபை அதிகாரத்தின் முதல் பகுதி தோப்பூரிற்கு வழங்கப்பட்டிருந்தது, அச்சபையானது துரதிஸ்டவசமாக 1 வருடத்திற்குள் நிறைவுக்கு வந்தது யாவரும் அறிந்ததே
வழங்கப்பட்ட முதல் பகுதியின் அரைவாசிக் காலங் கூட நிறைவடையாத நிலையில் அதன் மூலம் தோப்பூர் சமூகம் குறிப்பிட்ட காலத்தில் சாத்தியமான பணிகள் பெற்றுக் கொண்டாலும் முழுமையான அபிவிருத்தி கான சந்தர்ப்பம் அற்ற நிலையில் அவ்வாட்சி முடிவுக்கு வந்ததனை அறிந்தும் உங்களுக்கு அதிகாரம் தந்தோம் என்று மூன்று தசாப்தம் கடந்தும் நொண்டிக் காரணம் தேர்தலுக்கு முன்னர் இருந்தே SLMC தலைமையால் சொல்லப்பட்டது.

அதுமட்டுமல்ல மாகாணசபை ஆட்சிக்காலம் முழுவதும் தோப்பூர் வைத்திருந்து மூதூருக்கு அவ்வதிகாரத்தை மீண்டும் வழங்கவில்லை என்றால் துரோகம் எனலாம் முதல் பகுதியிலேயே தோப்பூரிற்கு வழங்கப்பட்டு ஒருவருடமே முடியாமல் சபை கலைந்தது எனில் எவ்வாறு துரோகமாகும்?

இது சம்பந்தமாக அக்கட்சி சார்ந்த தோப்பூர் போராளிகள் அவர்களின் யதார்த்தமே அற்ற நொண்டிச் சாட்டினை உடைத்தெறிந்திருக்க வேண்டும்.

6. மூதூரில் இருக்கின்ற உலமாக்கள், கல்விமான்கள் மற்றும் பெரும்பாலானோரிடம் தேர்தலுக்கு முன்பிருந்தே இம்முறை மூதூர் பிரதேச சபைக்கான தவிசாளருக்கான பதவியை தோப்பூர் மகனுக்கு வழங்க வேண்டும் என்ற கோசம் எழுப்பப்பட்டிருந்தது என்றாலும் கட்சியின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக தலைமைத்துவம் தோப்பூர் மக்களின் அபிலாசைகளைப் குழி தோண்டி புதைத்து வரலாற்று தவறை இழைத்திருக்காமல் ஏற்கனவே சாதகமான நிலைமையை கருத்தில் கொண்டு சிறு அதிகார விட்டுக் கொடுப்புடன் தவிசாளர் பதவியை தோப்பூரிற்கு வழங்கி கிட்டிய காலத்தில் முகங்கொடுக்க இருக்கிற இதைவிட அதிகாரம் கூடிய தேர்தல்களில் மூதூருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியிருக்கலாம்.

இறுதியாக தோப்பூர், மூதூர் அரசியல் பயணத்தில் கைகோர்த்து நடக்கும் கைங்கரியம் கட்சிதமாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது, இதனை எப்படி நிவர்த்தி செய்யப்போகின்றார்கள்.

Web Design by The Design Lanka