மூதூர் பிரதேச செயலாளருக்குப்,பிரியா விடையும் பாராட்டு விழாவும் » Sri Lanka Muslim

மூதூர் பிரதேச செயலாளருக்குப்,பிரியா விடையும் பாராட்டு விழாவும்

x

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

(எஸ்.எல்.நௌபர் )


மூதூர் பிரதேச செயலாளராக நீண்டகாலமாக  சிறப்பாகப் பணியாற்றி, ஏறாவூர் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றலாகிச்செல்லும் மூதூர் பிரதேச செயலாளர் வீ..யூசூப்புக்கு மூதூர் பிரதேச செயலக அலுவலர்கள் ஏற்பாடுகள் செய்த பிரியாவிடை வைபவமும் சேவை நலன் பாராட்டு விழாவும் மூதூர் பிரதேச செயலக மண்டபத்தில் 6 ஆந் திகதி புதன் கிழமை மாலை மூதூர் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.தாஹீர் தலைமையில் நடைபெற்றது.

இதில் இடமாற்றலாகிச்செல்லும் பிரதேச செயலாளரின் சேவைகளைப் பாராட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் நினைவுச்சின்னங்களும், வாழ்த்துப்பாவும் மற்றும் பரிசில்களும் வழங்கி பிரதேச செயலாளர் வீ.யூசூப்பினை,கௌரவிக்கப்பட்டார்.

இதில் அனைத்து பிரதேச செயலக ஊழியர்களும் கலந்துகொண்டிருந்தனர் . இந் நிகழ்வில் இடமாற்றலாகிச் செல்லும் பிரதேச செயலாளர் வீ.,யூசூப் மூதூர் பிரதேசத்திற்கு ஆற்றிய பல்வேறு சேவைகளைப் பற்றியும் ,மூதூர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.தாஹீர் இங்கு சிறப்புரையாற்றினார்.

அத்துடன் இன்னும் அனேக உத்தியோகத்தர்களும் பிரதேச செயலாளர் வீ.யூசூப்பின் நல்ல பல சேவைகள் பற்றி இங்கு உரையாற்றி அவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.

x x.jpg2

Web Design by The Design Lanka