மூதூர் றிலைன்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன் » Sri Lanka Muslim

மூதூர் றிலைன்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்

r

Contributors
author image

தோப்பூர் நிருபர் முஹம்மட் புஹாரி

மூதூர் உதைப்பாந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட இலங்கை உதைப்பந்தாட்ட தலைவர் கிண்ணத்தின் இறுதிப் போட்டி ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது. இதில் றிலைன்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

றிலைன்ஸ் மற்றும் ஈராக் ஆகிய அணிகள் மோதிய இவ் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளாலும் குறித்த நேரத்தினுல் கோல்களை போட முடியவில்லை.இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா 5 பெனால்டி உதைகள் வழங்கப்பட்டன.இதில் ஈராக் அணியினர் 5 பெனால்டி உதைகளில் 1 கோலினை புகுத்த றிலைன்ஸ் அணியினர் 4 பெனால்டி உதைகளை மாத்திரம் பயன்படுத்தி 2 கோல்களை புகுத்தி வெற்றியை தனதாக்கிக் கொண்டனர்.

இவ் இறுதிப் போட்டியில் பிரதம அதீதியாக இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் அநுர டி சில்வா கலந்து கொண்டதோடு ஏனைய அதீதியாக மூதூர் உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவர் எம்.எஸ்.எம்.இர்பான் ஆகியோர் கலந்து கொண்டனர்.அத்தோடு மூதூர் உதைப்பந்தாட்ட லீக்கின் அங்கத்தவர்களினால் இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் விசேட அம்சமாகும்.

r r.jpg2 r.jpg2.jpg3 r.jpg2.jpg6 r.jpg2.jpg9

Web Design by The Design Lanka