மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்! - Sri Lanka Muslim

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்!

Contributors

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

இவர், கண்டி – செங்கடகல நிருபராக வீரகேசரி,  தினகரன் பத்திரிகை உற்பட பல்வேறு பத்திரிகைளிலும் இலத்தரனியல் ஊடகங்களிலும் பிரதேச நிருபராகக் கடமையாற்றியுள்ளர்.

அகில இலங்கை சமாதான நீதவானான  இவர் கலாபூசணம், ரத்னதீபம், மற்றும் தகவல் துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றவராகும்.  அத்துடன் பிரதேச முஸ்லிம் விவாகப்ப திவாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இரண்டு ஆண் பிள்ளைகளின் தந்தையான இவர் கண்டி தென்னக்கும்புறைப் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். வீரகேசரி பத்திரிகையில் சுமார் 40 வருடங்களுக்கு மேல்  பிரதேச நிருபராக இருந்துள்ளார்.

வியாழக்கிழமை காலை திடீர் என சுகவீனமுற்று மரணித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். சிறிது காலமாக சுகவீன முற்ற நிலையில் இருந்தார்.   மரணிக்கும் போது இவருக்கு 73 வயதாகும்.  ஜனாஸா தென்னக்கும்புறையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

Web Design by Srilanka Muslims Web Team