மூன்று குழந்தைச்செல்வங்களின் உயிரை காப்பாற்ற முடியுமா ? » Sri Lanka Muslim

மூன்று குழந்தைச்செல்வங்களின் உயிரை காப்பாற்ற முடியுமா ?

child

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஹசன் றுஸ்னி – அக்கரைப்பற்று


அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த தேர்தல் காலத்தில் பேசப்படும் பேச்சுக்கள் சமூகம் சார்ந்தவையாகவே இருக்கின்றன.

எல்லோரும் இந்த சமூகத்திலுள்ள அனைத்து மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்ற ரீதியல் தங்களது வாதங்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்த சமூகத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான சொந்தப்பிரச்சினைகளோடு உணவின்றி, நோய் நொடியோடு வாழும் ஏழை எளியவர்களும் வாழத்தான் செய்கின்றார்கள்.

அவர்களில் ஒரு சகோதரியின் பிரச்சினையை உங்கள் முன் கொண்டு வருகிறோம்.

அவரும் எம்மில் ஒருவர். எம்மைப்போன்று நம்மோடு வாழ வேண்டிய ஒருவர் உங்களிடம் உயிர் பிச்சை கேட்டு வந்திருக்கின்றார்.

ஒரு கணவன் தன் துணைவியாருக்காக உங்கள் முன் உதவி கேட்டு நிற்கின்றார்.

 மூன்று குழந்தைச்செல்வங்கள் தன் தாய்க்காக உங்கள் முன் உதவி கேட்டு நிற்கின்றனர்.

அட்டளைச்சேனை, தைக்கா நகரைச் சேர்ந்த சகோதரி ஏ.கே பஷீலா அவர்களின் மூளையில் ஏற்பட்ட கட்டியினால் அவரின் உயிருக்கு ஆபத்து எனும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்வதாயின் சுமார் ஆறு லட்சம் ரூபாய் (600,000RS) செலவாகும் என வைத்தியர்கள் தெரிவித்து விட்டனர்.

இங்கு நீங்கள் செய்யும் ஒவ்வொரு உதவியாலும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படும் பேரிடர்களிலிருந்து காப்பாற்றுவான்.

என்ற ஈமானிய நெஞ்சோடு இவ்வுதவி கோரப்படுகின்றது.

அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் பறகத் செய்வானாக.

தொடர்புகளுக்கு :

0094 77 3231700 / 0094 75 2533931

8b348627-7c7a-43e1-a2eb-4622b4a9d80e 39a802d7-02ea-4cb9-bd96-2463b518ab76 b8d6f19b-f655-48fb-a44b-9c57e0043699 f597b85c-6905-4b0b-bfa8-d4a491f3cc87

Web Design by The Design Lanka