மூன்று மசாஜ் நிலையங்களில் துப்பாக்கிப் பிரயோகம்..எட்டுபேர் உயிரிழப்பு. - Sri Lanka Muslim

மூன்று மசாஜ் நிலையங்களில் துப்பாக்கிப் பிரயோகம்..எட்டுபேர் உயிரிழப்பு.

Contributors


ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் அமைந்துள்ள மூன்று மசாஜ் நிலையங்களில் செவ்வாயன்று

இரவு முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்தவர்களில் ஆறு ஆசிய பெண்களும் அடங்குவதாக தெரிவித்த பொலிஸார், துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபரையும் கைது செய்தாக கூறினர்.அட்லாண்டாவின் வடக்கே செரோகி கவுண்டியில் உள்ள யங்ஸ் ஆசிய மசாஜ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் ஒரு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மாலை 6 மணிக்கு சற்று முன்னர் அட்லாண்டாவில் அமைந்துள்ள மேலும் இரு மசாஜ் நிலையங்களில் நடந்த துப்பாக்கி சூட்டின்போது நான்கு பேர் இறந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந் நிலையில் இந்த துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தில் 21 வயதுடைய ராபர்ட் ஆரோன் லாங் என்ற நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team