மூன்றே ஆண்டுகளில் பூர்த்தி செய்யக்கூடிய பேராதெனிய BBA வெளிவாரிப் பட்டப்படிப்பு (விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன) - Sri Lanka Muslim

மூன்றே ஆண்டுகளில் பூர்த்தி செய்யக்கூடிய பேராதெனிய BBA வெளிவாரிப் பட்டப்படிப்பு (விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன)

Contributors

மூன்றே ஆண்டுகளில் பூர்த்தி செய்யக்கூடிய பேராதெனிய BBA வெளிவாரிப் பட்டப்படிப்பு (விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன)

தொழில், கல்வி வழிகாட்டல்களில் ஈடுபாடு கொண்ட அந்த நபரின் மனைவிக்கு உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் A சித்தி கிடைத்த நிலையில், அப்போதைய அவர்களின் குடும்ப நிலையில் பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பை தொடரும் சூழல் அவரது மனைவிக்கு வாய்க்கவில்லை.

இந்த நிலையில் அந்த நபர் தனது மனைவியை பேராதெனிய பல்கலைக்கழக BBA (online) பட்டப்படிப்பில் இணைத்துவிட்டார். ஆறு மாதங்களுக்கு ஒரு பரீட்சை சகிதம் மூன்று ஆண்டுகளில் பட்டப்பிடிப்பு பூர்த்தியானதோடு, தான் அடைய விரும்பிய முகாமைத்துவப் பட்டதாரியாகி, இன்று பட்டதாரி பயிலுனர் நியமனமும் கிடைக்கப்பெற்று, சில மேற்படிப்புகளில் ஈடுபடும் முயற்சியில் அவர் மனைவி இருக்கிறார்.

குறித்த மூன்று ஆண்டுகளில் கருவுற்று, பிள்ளை பிறந்து, பிள்ளை வளர்ந்து, convocation தினத்தில் பிள்ளை ஓடிவிளையாடும் வரை பல சிரமங்களை எதிர்கொண்டாலும், குறித்த கற்கை நெறியில் காணப்பட்ட நெகிழ்வுத்தன்மையும், கற்பித்தல் முறைமைகளும் மிகவும் உறுதுணையாக இருந்தமை குறிப்பிடப்பட வேண்டிய விடயங்களாகும். சரியாக மூன்றே ஆண்டுகளில் கற்கை நெறி பூர்த்தியாகியிருந்தமை முக்கிய விடயமாகும் (2014 – 2017). மேலதிக வகுப்புகளுக்கு வேறெங்கும் செல்ல வேண்டிய அவசியமும் இந்தக் கற்கை நெறியில் இல்லை.

எதற்காக இந்தக் கதையை எழுதுகிறேன் என்றால் தொழில், கல்வி வழிகாட்டல்களில் ஈடுபாடு கொண்ட அந்த நபர் வேறு யாருமல்ல ! அது நானேதான். குறித்த பட்டதாரி என் மனைவிதான்..

அதுதவிர புதிய கலைத்திட்டத்தின் பிரகாரம் முதலாவது வருடத்தை பூர்த்தி செய்து, பின்னர் தொடர முடியாது போனால் Certificate in Management சான்றிதழும், இரண்டாவது வருடம் பூர்த்தியாகி exit ஆக விரும்பினால் Higher Diploma in Management சான்றிதழும், மூன்று வருடங்கள் முழுமையாக பூர்த்தி செய்தால் பட்டச் சான்றிதழும் கிடைக்கும்.

உங்களிடம் ஆங்கில மொழியில் ஓரளவு திறமையும், வெளிவாரிப்பட்டம் ஒன்றை குறிப்பிட்ட காலத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற வேட்கையும் இருந்தால் பேராதெனிய BBA பட்டப்பிடிப்பு சிறந்ததொரு தெரிவாகும். இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு https://www.pdn.ac.lk/cdce/bba.php

இந்தக் கற்கை நெறி தொடர்பில் ஏதும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் வினவலாம்.

வாழ்த்துக்கள்.

எப். எச். ஏ. ஷிப்லி
சிரேஷ்ட விரிவுரையாளர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

Web Design by Srilanka Muslims Web Team