இம்போட் மிரர் மற்றும் லக்கி விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி - Sri Lanka Muslim

இம்போட் மிரர் மற்றும் லக்கி விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Contributors

-நஸீப் முஹம்மட் -எம்.பைஷல் இஸ்மாயில்-

 

இலங்கையின் 66 ஆவது தேசிய சுதந்திர தினத்தையொட்டியும் அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் 53 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டும் இம்போட் மிரர் மற்றும் லக்கி விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய லக்கி விளையாட்டுக்கழக வீரர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் லக்கி போரல் அணியினர் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது.

 

 

லக்கி விளையாட்டுக்கழக வீரர்களுக்குள் நடத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியில் தலா 11 பேர் கொண்ட அணிகளுக்கிடையிலான 10 ஓவர்களைக் கொண்ட இப்போட்டிகள் யாவும் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை மைதானத்தில் இன்று 2014.02.04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

 

 

இறுதிப்போட்டிக்கு லக்கி எமரெல்ட் அணியினரும் லக்கி போரல் அணியினரும் தெரிவு செய்யப்பட்டன. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லக்கி எமரெல்ட் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 85 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஏ.இன்ஸமாம் 25 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

 

 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்கி போரல் அணியினர் 8 ஆவது ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். இதில் எம்.எப்.அஸாம் அஹமட் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களைப் பொற்றுக்கொடுத்தார்.

 

 

இச்சுற்றில் லக்கி போரல் அணியைச் சேர்ந்த எம்.எப்.அஸாம் அஹமட் ஆட்ட நாயகனாகவும், எம்.சியாத் சிறந்த பந்து வீச்சாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

 

 

இதில் வெற்றிபெற்ற லக்கி போரல் அணியினருக்கு ரூபா 10 ஆயிரம் பணப்பரிசிலும், வெற்றிக் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது.

 

 

லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவர் எஸ்.எல்.முனாஸ் விஷேட அதிதியாகவும், அட்டாளைச்சேனை அனைத்து விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஹம்ஸா சனூஸ், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேனவின் பிரத்தியோக செயலாளரும் அல் ஜெஸீறா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தனர்.
DSC00117DSC00149DSC00134DSC00158DSC00129DSC00165DSC00126DSC00175

Web Design by Srilanka Muslims Web Team