மெல்போர்னில் முதல் விமானம் என்ற பெருமையையுடன் தரையிறங்கியது ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் - Sri Lanka Muslim

மெல்போர்னில் முதல் விமானம் என்ற பெருமையையுடன் தரையிறங்கியது ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்

Contributors

விக்டோரியாவின் சர்வதேச ஹோட்டல் தனிமைப்படுத்தல் திட்டத்தின் கீழ் பல மாதங்களுக்கு பின்னர் மெல்போர்னில் தரையிறங்கிய முதல் பயணிகள் விமானம் என்ற பெருமையை ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானம் பெற்றுள்ளது.

அதன்படி ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் – 604 என்ற விமானம் அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த விமானத்தில் பயணித்த 11 பணிகள் பேருந்து மூலம் இருவார கால தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக பாதுகாப்புடன் ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை தோஹா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானம் மூலமாக இன்றையதினம் மொத்தம் 106 பயணிகள் வருவார்கள் என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் பயணிகள் விமானங்கள் விக்டோரியா மாநிலத்தில் தரையிறங்கவில்லை.

கொவிட்-19 அச்சுறுத்தல்கள் காரணமாக ஹோட்டல்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையிலிருந்து விலகின. மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளும் முடக்கல் நிலையில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team