மேன் புக்கர் பரிசு பெறும் இளம் எழுத்தாளர் - Sri Lanka Muslim

மேன் புக்கர் பரிசு பெறும் இளம் எழுத்தாளர்

Contributors

காமன்வெல்த் நாடுகள்,அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே நாட்டுக் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இதுவரை இந்த விருது வழங்கப்பட்டு வந்தது.வரும் 2014 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு,இங்கிலாந்தில் வெளியிடப்படும் அனைத்து நாவல்களும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று இந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த பரிசினைப் பெறும் எழுத்தாளர் சர்வதேசப் புகழைப் பெறுவதால் புத்தக வர்த்தகத்தில் இந்தப் பரிசிற்கு பெரும் மதிப்பு உண்டு.  இந்த ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு நியூசிலாந்து நாட்டவரான எலினோர் காட்டன் எழுதியுள்ள ‘தி லூமினேர்ஸ்’நாவலுக்குக் கிடைத்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டு அப்போது நடைபெற்றுவந்த தங்க வேட்டை குறித்து எழுதப்பட்ட இந்த மர்ம நாவல் 832 பக்கங்கள் கொண்ட மிக நீளமான நாவல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமின்றி இந்த பரிசினைப் பெறும் இளம் எழுத்தாளர் என்ற பெருமையும் 28 வயதான எலினோருக்குக் கிடைத்துள்ளது.

இது இவருடைய இரண்டாவது நாவலாகும்.இவர் எழுதிய முதல் நாவலான ‘தி ரிஹர்சல்’ கார்டியன் அமைப்பு வழங்கும் முதல் புத்தகத்திற்கான விருதினைப் பெறும் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் உள்ள கில்ட் அரங்கத்தில் நடைபெற்றது.இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மனைவி கமீலா பார்க்கர் 50,000 பவுண்டு ரொக்கப்பரிசினையும், விருதினையும் எலினோர் காட்டனுக்கு வழங்கினார்.

விக்டோரிய காலத்திய உணர்வு பூர்வ கதையமைப்பு என்ற பிரிவில் இந்த நாவல் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அப்போது நீதிபதிகள் குழுவினால் அறிவிக்கப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team