மேயர் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டி அங்குரார்ப்பணம் - Sri Lanka Muslim

மேயர் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டி அங்குரார்ப்பணம்

Contributors
author image

Aslam S.Moulana

கல்முனை மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்கள் பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மேயர் சவால் கிண்ண கடின பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி நேற்று (27) அங்குரார்ப்பணம்  செய்து வைக்கப்பட்டுள்ளது.

 

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

 

அத்துடன் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அப்துல் மனாப், கல்முனை பிர்லியண்ட் கழக பயிற்றுவிப்பாளர் எம்.எம்.பளீல் ஆகியோர் உட்பட மற்றும் பலர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

 

நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு 16 அணிகள் பங்கேற்கவுள்ள இச்சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டும் கழகத்திற்கு மேயர் சவால் கிண்ணத்துடன் 25000 (இருபத்தி ஐயாயிரம்) ரூபா பணப் பரிசும் வழங்கப்படும் என்று முதல்வர் இதன்போது அறிவித்தார்.

nisam1

 

nisam1.jpg2

 

nisam1.jpg2.jpg3

 

nisam1.jpg2.jpg4

Web Design by Srilanka Muslims Web Team