மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது நியூசிலாந்து - Sri Lanka Muslim

மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது நியூசிலாந்து

Contributors

மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.

நியூசிலாந்து– மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்து வந்தது.

இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 441 ஓட்டங்கள் குவித்தது.

நேற்றைய 2 நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

மூன்றாம் நாளான இன்று தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நியூசிலாந்து வீரர் போல்ட்டின் பந்து வீச்சில் திணறியது.

193 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் ஆனது, போல்ட் 6 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சையும் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து விக்கெட்டுகளையும் இழந்து திணறியது.

அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், நியூசிலாந்து 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது, முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team