மேலும் ஒரு மாதத்திற்கு பயணக்கட்டுப்பாட்டை விதியுங்கள், தவறினால் விளைவுகள் மோசமாகும் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை..! - Sri Lanka Muslim

மேலும் ஒரு மாதத்திற்கு பயணக்கட்டுப்பாட்டை விதியுங்கள், தவறினால் விளைவுகள் மோசமாகும் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

Contributors

தற்போது அமுலில் உள்ள பயணத்தடையின் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள குறைந்தது மேலும் ஒரு மாதமாவது அந்த கட்டுப்பாட்டை நீடிக்கவேண்டுமென இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் சங்கம் தெரிவித்துள்ளது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மேலும் ஒரு மாதத்திற்கு பயணக்கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்தன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மே்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளபோதிலும் பொதுமக்களின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சியாக இருக்க முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார்.சிலர் பொறுப்பற்ற முறையில் செயற்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய அவர், பயணக் கட்டுப்பாடுகளின் சரியான முடிவுகளைப் பெற மக்களின் ஆதரவு அவசியம் என்று குறிப்பிட்டார்.

தினமும் சுமார் 3,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும், சமுகத்தில் 10,000 பேர் வரை அடையாளம் காணப்படாமல் உள்ளனர் என அவர் தெரிவித்தார். அதன்படி, எதிர்காலத்தில் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும், மேலும் மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறையாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team