மேலும் பல அமைப்புக்கள், நபர்களை தடைசெய்யப்போகும் இலங்கை! - Sri Lanka Muslim

மேலும் பல அமைப்புக்கள், நபர்களை தடைசெய்யப்போகும் இலங்கை!

Contributors

நாட்டில் மேலும் பல அடிப்படைவாதங்களுக்கு துணைபோகும் அமைப்புக்கள் இருப்பதாகவும் அவற்றை விரைவில் தடை செய்யப் போவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐ.எஸ்.ஐ.எஸ், அல் குவைதா, சூப்பர் முஸ்லிம் என ஏற்கனவே 11 அமைப்புக்கள் இலங்கைளில் தடை செய்யப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் மேலும் பல அமைப்புக்களும், அதேபோல நபர்களும் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் அவர்களைத் தடைசெய்வதாகவும் கூறினார்.

இதேவேளை, தீவிரவாதத்திற்கு ஆதரவளித்து பேசுவோர், பணம் சேகரிப்போர் என அதற்கு மறைமுகமாக ஆதரிப்போருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையில் திருத்தங்களைக் கொண்டுவரும் யோசனை விரைவில் நாடாளுமன்றத்திற்கு சமர்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team