மேலும் பல பொருட்களுக்கு விரைவில் தடை? - Sri Lanka Muslim
Contributors

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏப்ரல் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மேலும் சில பொருட்களுக்கும் தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுற்றாடல் அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் இவ்வாறு தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ள உற்பத்திகளின் பட்டியல் சுற்றாடல் அமைச்சுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் அது தொடர்பில் தொடர்ந்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team