மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட சுற்றறிக்கை வெளியீடு - Sri Lanka Muslim

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட சுற்றறிக்கை வெளியீடு

Contributors

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் விசேட சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதி பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைக்கும் போது, குழுக்களாக பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக கொரோனா தடுப்பு தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை பின்பற்றுதல் வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

அதற்கமைய, ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மாத்திரமே இருக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளரால் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமான மாணவர்களை குழுக்களாக அமைத்து, ஒருநாள் விடுத்து மறுநாள் என்ற வகையில் வகுப்புக்களை நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஆசிரியர்களும் கல்விசாரா ஊழியர்களும் தினமும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஏதேனும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்படுமாயின், அந்த பகுதிக்குரிய பாடசாலைக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதிக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளரால் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team