மேல் மாகாணத்தில் TNA களத்தில்! தனித்தா? மனோவுடனா? - Sri Lanka Muslim

மேல் மாகாணத்தில் TNA களத்தில்! தனித்தா? மனோவுடனா?

Contributors

எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி போட்டியிடவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை மேல் மாகாணத்திலுள்ள தமிழ்ப் பிரமுகர்களுடன் இரகசிய சந்திப்புக்களை நடத்தி வருவதாகவும் தெரிய வருகிறது. இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் தொடர்புகொண்டு கேட்டபோது நீங்கள் கேள்விப்பட்டது உண்மையே, ஆனால் இன்னமும் தீர்க்கமான முடிவிற்கு வரவில்லை எனத் தெரிவித்தார்.

தலைமையின் உத்தரவின் பிரகாரமே இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத அப்பிரமுகர் தெரிவித்தார். போட்டியிடுவதாயின் தமிழரசுக் கட்சி தனித்தா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவா அல்லது ஜனநாயக மக்கள் முன்னணியுடனா போட்டியிடும் எனக் கேட்டபோது இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து உங்கள் கேள்விக்கு விடை தெரியவரும் எனவும் அவர் பதிலளித்தார்.(jn)

Web Design by Srilanka Muslims Web Team