மேல் மாகாண அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் திகதி இதோ! - Sri Lanka Muslim

மேல் மாகாண அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் திகதி இதோ!

Contributors

மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் அனைத்து வகுப்புகளு்ம மீள ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வருகின்ற மார்ச் 29ஆம் திகதி முதல் அனைத்து வகுப்புக்களும் வழமைபோல இடம்பெறும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்திருக்கின்றார்.

மேல் மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளில் 5,11 மற்றும் 13ஆம் வகுப்புக்கள் கடந்த 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், ஏனைய வகுப்புக்களை ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி மீள ஆரம்பிக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team