மே 9 கலவரம்: பல்கலைகழக மாணவர் கைது! - Sri Lanka Muslim
Contributors

மே 9ஆம் திகதி முதல் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இன்று காலை வரை சுமார் 2,725 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், மேலும் அன்றைய தினம் ஹோமாகம பிரதேச சபை சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை மற்றும் கொட்டாவை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பல்கலைகழக மாணவர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

857 சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 2,725 பேரில் 1,083 பேர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, 22 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள அதேவேளை, நேற்று மாத்திரம் 8 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

Web Design by Srilanka Muslims Web Team