மைத்திரியின் "அரசாங்கத்தின் பலவீனம்" என்ற கருத்துக்கு கடும் விமர்சனம்..! - Sri Lanka Muslim

மைத்திரியின் “அரசாங்கத்தின் பலவீனம்” என்ற கருத்துக்கு கடும் விமர்சனம்..!

Contributors
author image

Editorial Team

அரசாங்கத்தின் பலவீனமான நடவடிக்கை காரணமாக சொந்த பிரதேசத்திற்கும் தன்னால் செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்த முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) மீது கடுமையான விமர்சனத்தை ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்வைத்துள்ளது.

கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட உலங்கு வானூர்த்தி பயணங்களை நினைவுபடுத்திய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா (Dilan Perera) , அரசாங்கத்தின் பலவீனம் பற்றியும் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக பொலன்னறுவைக்கு செல்ல முடியாதிருப்பதாக மைத்திரிபால சிறிசேன கூறினார். அன்று அவர் அமைச்சராக இருந்தபோது நானும் இராஜாங்க அமைச்சராக இருந்தேன். அன்று 36 ரூபா நெல் விலையாக இருந்தது. அன்று அவர் உலங்கு வானூர்த்தியில் சென்றிருக்கலாம். ஆனால் நான் பதுளை, மஹியங்கனைக்கு மிகவும் கஸ்டப்பட்டுதான் சென்றேன்.

கோட்டாபய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நெல் விலையை 50 ரூபாவாக்கினோம். தனியார்துறை சென்று நெல் 60 ரூபா வரை பேரம்பேசி வாங்கினார்கள். விவசாய சரிவு காரணமாக பொலன்னறுவைக்கு செல்லமுடியாது என்று கூறும் மைத்திரிபால சிறிசேன, நெல்லுக்கு அதிக விலை எமது அரசாங்கமே கொடுத்தது என்பதை சிந்திக்க வேண்டும்

Web Design by Srilanka Muslims Web Team