மைத்திரியின் புதிய வியூகம், கூட்டிணையும் விமல், கம்மன்பில..! - Sri Lanka Muslim

மைத்திரியின் புதிய வியூகம், கூட்டிணையும் விமல், கம்மன்பில..!

Contributors

முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட்டணி அமைப்பதற்கான முதற்கட்டப் பேச்சினை நடத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தச் சந்திப்பானது சூம் ஊடாக நடத்தப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவும் கலந்துகொண்டிருப்பதாக மைத்திரியின் நெருக்கமான இடத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.

இதன்மூலம் மிகப்பெரிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு இந்த மூவரும் இணக்கம் வெளியிட்டிருக்கின்றனர். அடுத்தகட்டப் பேச்சில் மேலும் பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team