மைத்திரியின் முகநூல் பதிவால் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு..! - Sri Lanka Muslim

மைத்திரியின் முகநூல் பதிவால் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு..!

Contributors

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முகநூலில் இட்டுள்ள பதிவால் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பதிவு அரசியல் அர்த்தம் கொண்டது எனவும் மைத்திரிபால சிறிசேன அரசியலில் முக்கிய முடிவு எடுக்க முனைவதாகவும் அரசியல் விமர்சகர்கள் அவரது பதிவை விமர்சித்துள்ளனர்.

அந்த பதிவு வருமாறு, “சில அத்தியாயங்கள் சோகமானவை, மற்றவை சாகசமானவை. சவாலான அத்தியாயங்கள் இல்லாமல் இல்லை. ஒரு முதிர்ந்த எழுத்தாளர் சரியான நேரத்தில் சரியான புத்தகத்தை எழுதுவார். ஒரு முதிர்ந்த எழுத்தாளரின் கடைசி அத்தியாயம் ஆச்சரியமாக இருக்கும்.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். 

Web Design by Srilanka Muslims Web Team