மைத்திரியின் வீட்டில் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள பங்காளி கட்சிகள் சந்திப்பு..! - Sri Lanka Muslim

மைத்திரியின் வீட்டில் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள பங்காளி கட்சிகள் சந்திப்பு..!

Contributors

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகள் சில முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு இல்லத்தில் நேற்று இரவு இரகசிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

யுகதணவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீதமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தம் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஆளும் கூட்டணியின் சிறு கட்சிகள் நேற்று முன்தினமும் கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஒன்றுகூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team