மைத்திரி பாணியில் அப்பத்துடன் பல்டி [Political Gossip] » Sri Lanka Muslim

மைத்திரி பாணியில் அப்பத்துடன் பல்டி [Political Gossip]

part

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

[எம்.ஐ.முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர்]


இன்றைய அரசியல் உலகில் பதவிக்காகவும் பணத்துக்காகவும் பல்டி அடிப்பதென்பது சாதாரண விடயம்.

தன் கட்சியோடு முரண்பாட்டுக் கொண்டு அடுத்த பக்கம் பல்டியடிப்பது அல்லது இறுதிவரைக்கும் கட்சியோடு- கட்சித் தலைமையோடு நல்லுறவைப் பேணிவிட்டு மறுநாளே சத்தமின்றி பல்டியடிப்பது என்று இரண்டு வகையான பல்டிகள் இன்று இடம்பெறுகின்றன.

அதில் இரண்டாவது பல்டியைத்தான் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுத்தார்.அந்த பல்டியை அவர் பிரபல்யப்படுத்தியது அப்பம் மூலம்தான்.
ஆம்..முதல் நாள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் கூட இருந்து அப்பம் சாப்பிட்டுவிட்டு மறுநாள் சத்தமின்றி பல்டியடித்தார் மைத்திரி என்றே இப்போதுவரைக்கும் புலம்பித் திரிகின்றார் மஹிந்த.

அதனைத் தொடர்ந்து பல்டியடிக்கும் அரசியல்வாதிகள் மைத்திரியின் பாணியைத்தான் பின்பற்றுகிறார்கள் என்று அறியக் கிடைத்துள்ளது.

அண்மையில் மைத்திரி பக்கம் பல்டியடித்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட வட மத்திய மாகாண சபையின் மஹிந்த அணி உறுப்பினர்களும் மைத்திரியின் பாணியைத்தான் பின்பற்றினார்களாம்.

மஹிந்த அணி எம்பி எஸ்.எம்.சந்திரசேனவை இவர்கள் முதல் நாள் இரவு சந்தித்துப் பேசி அவருடன் அப்பம் சாப்பிட்டுவிட்டே சென்றார்களாம்.மறுநாள் பல்டி செய்தியைத்தான் கேள்விப்பட்டாராம் சந்திரசேன.

மஹிந்தவைப்போல் சந்திரசேனவும் இப்போது போகுமிடமெல்லாம் இந்த துரோகத்தைப்பற்றி சொல்லிச் சொல்லி புலம்புகிறாராம்.சரிதான் விடுங்க பாஸ்.தாம் தேர்ந்தெடுத்த தலைவர் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே.

part

Web Design by The Design Lanka