மையத்தெல்லாம் மக்கள் பிரதிநிதியாக...!!! » Sri Lanka Muslim

மையத்தெல்லாம் மக்கள் பிரதிநிதியாக…!!!

politics

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-மீராவோடை சுபைர்-


காலம்
கனிய தவறிவிட்டது
கோலம் கூடி
கவிழ தொடங்கிவிட்டது…!!!

அடிச்சிப் பறிச்ச பதவி
அதற்கேது இனி உதவி
ஆண்டு பார்க்கட்டும்
ஆட்டங்காணும்
அரசியல்…!!!

கூட்டம் போட்டு
கூத்தடிச்சா
கூடி வருவாங்க
மக்களென்று
தப்புக் கணக்கு
போட்டாங்களோ…!!!

பாட்டுப் போட்டு
பேச்சுப் போட்டு
வோட்டு கேட்ட காலம்
மழுங்கிப் போச்சு…!!!

மக்கள் மனங்களெல்லாம்
புழுங்கிப் போச்சு
மக்களின் அமானிதத்தை
விழுங்கியவர்கள்
மஹ்ஷரில் சந்திக்கட்டும்…!!!

மையத்தெல்லாம்
மக்கள் பிரதிநிதியாகி
என்னதான்
கிழியப் போகுது…!!!

Web Design by The Design Lanka