மை...மை...மை...மை3! » Sri Lanka Muslim

மை…மை…மை…மை3!

my

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எஸ். ஹமீத்


*வாய்மை-தூய்மை-நேர்மை
என
மும்மை கொண்டழைத்தோம்
உம்மை;
ஏன் ஏமாற்றினீர் எம்மை?

*தவறினீர் வாய்மை-நாம்
தவிக்கிறோம்; கொடுமை!
இழந்திட்டீர் தூய்மை-உமது
இதயமோ கருமை!
இல்லையொரு நேர்மை-உம்மிடம்
இருப்பதெல்லாம் கயமை!

*மங்கியே மறைகிறது உமது
மகிமை…விரைவில்
மண்ணோடு மண்ணாகும் உம்
மாட்சிமை!

*துவேஷத்துக்கே உம்மாட்சியில்
முதன்மை…வெகு
தூரமாச்சு சட்டங்களின்
முறைமை!

*எரித்திட்டார் எங்களது உடமை-அதை
எதிர்த்திடுதல் உங்களது கடமை!
ஆனாலும்-
வாய்மூடி இருந்தீர் நீர் பதுமை-இது
வையகத்தில் நிகழாத புதுமை!

*நாமேதான் கொண்டுவந்தோம்
உம்மை-நீரின்றோ
ஞானசாரர் ஆட்டுவிக்கும்
பொம்மை!

*அல்ல நாங்கள் ஆமை;
எம்மை-
அடக்க நினைத்தால்
அது உமக்கே தீமை!

*இந்நாட்டில் வாழுதல்
எங்களின் உரிமை…அதை
இல்லையெனச் சொல்லுபவர்
இனவாத எருமை!

*நாம் காப்பது பொறுமை!
நீர்
கட்டவிழ்த்து விட்டிருப்பது
பொறாமை!

*முஸ்லிம்கள் என்பதில்
எமக்குப் பெருமை-எம்மை
முடக்க நினைப்பதும் மடமை!

*இனியேனும் பார்க்காதீர்
வேற்றுமை-இனங்களிடை
ஏற்படுத்த முனையுங்கள்
ஒற்றுமை!

Web Design by The Design Lanka