மொட்டுக் கட்சியின் அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு! - Sri Lanka Muslim

மொட்டுக் கட்சியின் அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு!

Contributors

புதிய பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 109 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அஜித் ராஜபக்ஷ- 109

ரோஹினி கவிரத்ன – 78

செல்லுபடியற்ற வாக்குகள் – 25

பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பெயர்கள் நாடாளுமன்றில் இன்று முற்பகல் முன்மொழியப்பட்டு, இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்ததோடு, ஜி.எல்.பீரிஸ் எம்.பி அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்திருந்தார்.

Web Design by Srilanka Muslims Web Team