மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்கிறார் கோட்டாபய..! - Sri Lanka Muslim

மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்கிறார் கோட்டாபய..!

Contributors
author image

Editorial Team

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) அழைப்பின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(gotapaya Rajapaksa) எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார். குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய செல்லவுள்ளதாக நியூஸ் 18 செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியுடன் 24 பேர் கொண்ட உத்தியோகபூர்வ குழு மற்றும் 125 பௌத்த பிக்குகள் உடன் வருவார்கள் என்று நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. பௌத்த மக்கள் தொகை கொண்ட நாடுகளைச் சேர்ந்த பல வெளிநாடுகளின் தூதுவர்களும் அந்த நாளில் குஷிநகருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team