மோடி - பசில் ராஜபக்ஷ சந்திப்பு! - Sri Lanka Muslim
Contributors

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று அல்லது நாளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு,

இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே செவ்வாயன்று (30-11-2021) புது டெல்லி வந்து சேர்ந்தார்.

பசில் ராஜபக்சே புதன் அல்லது வியாழக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

ராஜபக்சே இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அரசியல் தயாரிப்புகளை செய்தவர்களில் முதல் இடம் பசில் ராஜபக்சேவுக்கு உண்டு.

ராஜபக்சே இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்கால நடைமுறை திட்டங்களை லலித் வீர துங்கவுடன்  அவர்தான் தயாரித்தார்.

விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிப் போரின்போது இந்திய அரசுடன் இடைவிடாமல் தொடர்பு கொண்டு இந்திய அரசின் நடவடிக்கைகளை திட்டமிட்டு வகித்தவர்களில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கடந்த ஜூலை மாதம் பசில் நிதி அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வரலாறு காணாத நிதி நெருக்கடி இலங்கை சிக்கித் தவிக்கும் நேரத்தில் இந்தியா அதற்கு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக அவர் இறங்கி வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இலங்கையில் பெரும் முதலீடுகளை இந்தியா செய்ய வேண்டும்.

இலங்கைக்கான சுற்றுலாத் திட்டங்களை இந்தியா வசித்து அமல் செய்ய வேண்டும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவதற்கு ஏற்பாடுகளை இந்திய அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்ற இரண்டு முக்கிய கொள்கைகளை வலியுறுத்துவது தான் பசில் டெல்லிக்கு வந்து இருப்பதன் நோக்கம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தூதரக அளவிலும் அமைச்சர்கள் நிலையிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இலங்கை இப்போரில் நிதி உதவி எதுவும் இந்திய அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என்று இலங்கை கருதுகிறார்கள் இன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசுக்கு இந்தியா உதவ வேண்டியது அவசியம் என்று இந்திய அரசியல் தலைவர்களுடன் பேசுவதற்காக பசில் வந்திருக்கிறார்.

இந்திய பிரதமர் தவிர மத்திய அமைச்சர்களுடன் அவர் பேச திட்டமிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team