இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக பாடுபட்ட சிறந்த சன்மார்க்க அறிஞர் மௌலவி றியாழ் கபூரி - றிசாத் பதியுதீன் - Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக பாடுபட்ட சிறந்த சன்மார்க்க அறிஞர் மௌலவி றியாழ் கபூரி – றிசாத் பதியுதீன்

Contributors

அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையின் முன்னால் பொதுச் செயலாளரும் சிறந்த மார்க்க அறிஞருமான மௌலவி எம்.ஜே.எம்.றியாழ் (கபூரி) அவர்களின் மறைவு குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்இஅமைச்சருமான றிசாத் பதியுதீன் தமது ஆழ்ந்த கவலையினை தெரிவித்துள்ளதுடன்இஅன்னாரின் சுவன வாழ்வுக்காக சகலரையும் பிரார்த்திக்குமாறும் வேண்டு கோள்விடுத்துள்ளார்.

மர்ஹூம் மௌலவி றியாழ் (பஹ்ஜி) அவர்கள் இலங்கை முஸ்லிம்களினால் நன்கு நேசத்துக்குள்ளான ஒருவராக இருந்து வந்தார்.எப்போதும் புன்முருவலுடன் மனம்சாந்தம் ஏற்படுத்தும் வகையில் நன்கு அன்பாக பழகக் கூடியவராக இருந்தார்.

இலங்கையின் மார்க்க அறிஞர்கள் வரிசையில் சிலாகித்து பேசக் கூடியவராகவும்இஇலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் பல நுால்களை எழுதி எமது மக்களின் வரலாற்றுப் பதிவைஏற்படுத்திய ஒருவராக மர்ஹூம் மௌலவி றியாழ் அவரல்களை காணமுடிந்தது.

குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் ஒற்றுமை விடயத்தில் சன்மார்க்கத்தின் தீர்ப்பின் அடிப்படையில் செயற்படும் ஊக்கத்தை சதாவும் முன்வைத்து தமது செயற்பாடுகளை செய்தவராகவும்இஇலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் ஊடக தன் குரலை மக்கள் உள்ளங்களில் பொதியச் செய்த ஒருவராக மர்ஹூம் மௌலவி எம்.ஜே.எம்.றியாழ் திகழ்ந்ததை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த கவலையினை தெரிவிப்பதுடன்இஅன்னாரின் ஜன்னத்துல் பிர்தவூஸ் சுவனம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team