யானைகளின் அச்சுறுத்தலுக்காக கூட்டம் கூட்டி ஆராய்ந்தார் இராஜாங்க அமைச்சர் விமலவீர !! - Sri Lanka Muslim

யானைகளின் அச்சுறுத்தலுக்காக கூட்டம் கூட்டி ஆராய்ந்தார் இராஜாங்க அமைச்சர் விமலவீர !!

Contributors

நூருள் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக அம்பாறை மாவட்ட வனவிலங்குத் துறை அதிகாரிகளுக்கும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று (15) நடைபெற்றது.

மாவட்டத்தில் விவசாயப் பணிகள் இப்போது நிறைவடைந்துள்ள நிலையில், காட்டு யானைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் படையெடுக்கும் நிலை அதிகரித்திருப்பதனால் பல இடங்களில் காட்டு யானைத் துரத்தல் மையங்களை நிர்மாணிக்கவும், மின் விளக்குகளை நிறுவுவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட மகாசங்கத்தினர், வனவிலங்கு திணைக்கள உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு படையின் அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்

Web Design by Srilanka Muslims Web Team